"ஜன்னல் ஓரமாய் முன்னாலே மின்னல் போலவே வந்தாயே.. விண்ணை தாண்டி ஒர் சொர்க்கத்தை மண்ணில் எங்குமே தந்தாயே..."
என சஹானாவ்வின் ஃபோன் அலறி தன் இருப்பை காட்ட.. அதை துண்டித்தவள்ளுக்கு தெரியும் மீண்டும் ஒரு முறை அழைப்பு வராது என்று ..இருந்தும் " போறான் போ" என நினைத்து கொண்டு ஊரில் இருந்து வந்திருக்கும் விஷ்வாவோடு பேச சென்றாள்...
பின்பு இரவில் ஒரு முடிவு செய்தவள்..ஒரு பெரிய செய்தியை அடிக்க ஆரம்பித்தாள்..!
" தேவ் ! எனக்கு தெரியும் நான் நேத்து 10 தடவ கூப்பிட்ட நால தான் இன்னிக்கு நீ கூப்பிட்டு இருக்கன்னு.. ஆனா நீ என்ன நினைக்கிறனு புரிஞ்சிக்க முடியல..
எனக்கு புரியுது தான் படிக்கணும்..! நிறைய மார்க் வாங்கனும் அதுலாம் தான் உன் எண்ணம் அப்டின்னு..! ஆனா நான் உன்ன தினம் பேசுன்னு தொல்லை பண்ணலயே தேவ் ! வாரம் கூட வேணாம் ! 2 இல்ல 3 வாரத்துக்கு ஒரு தடவ கூப்பிடுனு சொல்றேன்..!!
நம்ம ரெண்டு பேரும் லவ் பண்ண ஆரம்பிச்சு 2 வருஷம் முடிஞ்சு போச்சு.. அதுல ஒரு நாள் ஆச்சு நீயா கூப்பிட்டு " உன்கிட்ட பேசணும் போல இருந்துச்சுனு " சொல்லிற்பியா ??
"எதிர்பார்ப்புகள் தப்புன்னு தெரியும் " ஆனா பதில் ரியாக்ஷன் கூட இல்லனு சொன்னா எப்டி தேவ் ??
நானும் வரேன் உனக்கு மெசேஜ் போடுறேன்..நீ நான் போன பிறகு வர !! எல்லா மெசேஜ் உம் பாக்குற, சரி ஓகே வந்த வேலை முடிஞ்சது அப்டின்னு நீ பாட்டுக்கு போய்டுறியே தேவ் !! அவ எதோ உளறி இருக்கா அதுக்கு ஏன் பதில்லாம் அப்டின்னு நினைக்கிறியானு தெரியல !! ஒரு பச்சை புள்ளை சொல்லும் தேவ், "ரிப்ளை பண்ணனும் பதிலுகுன்னு "..
அது எல்லாம் குட்டி குட்டி மானர்ஸ் டா !! நீ சொல்லுவ ஒரு விஷயத்தை நான் பண்ண போறேன் அப்டின்னா முழு மனசா பண்ணுவேன்னு , லவ் பண்ண ஆரமிக்கிறப்போ பேசிக்கிட்டே இருப்ப இப்போ பார்த்தா மாச கணக்குல பேச மாடெங்குற..!
நீ மட்டும் தான் இப்டியா இல்ல எல்லாருமே அப்டி தானானு தெரியல.. இவ தன எங்க போய்ட போறா அப்டின்னு எதும் நினைப்பு வெச்சு இருக்கியா ??
எதுவோ ! ஆனா உனக்கு நான் முக்கியம்ன்னு நினைச்சு இருந்தா கண்டிப்பா டைம் ஸ்பெண்ட் பண்ணனும்னு
தோனிருக்கும்.!!"ஒரு விஷயம் நிலைக்கணும்ன்னு நீ நினைச்சா அதுக்கு உண்டான உழைப்ப நீ எடுக்கணும் !! "
என்னால உன்னையே நினைச்சிட்டு இருக்க முடியல.. நினைச்சா அழுகை வருது அதிகமா.."16 வயசுல காதல் வரது அழகு , அதிசயம் " அப்டின்னு சொன்ன பரதேசி எங்கன்னு தேடுறேன்..
எதுக்கு இப்டி ஃபீல் பண்றேன்னு தெரியாம பண்ணிட்டு இருக்கேன்.. ஒன்னு தான் கேக்குறேன் உன்கிட்ட.. நீ நிஜமா என்ன நோக்கதுல இருக்க..?? இந்த ஒரு வருஷத்துல நம்ம பேசுன நாட்கள் எவ்ளோ விரல் விட்டு எண்ணிரலாம்..!!
உனக்கு என்ன பிரச்சினை .. எதாச்சும் இருக்குன்னா சொல்லு !! .. என்கிட்ட பேச தோணலயா !!? அதயாச்சும் சொல்லு... இல்ல என்னையே பிடிக்கலையா !!?
"பிளீஸ் சே சம்திங் யா !! "
இப்போவும் பாத்துட்டு நீ பாட்டுக்கு போகாத தேவ் !! உன் கால் கட் பண்ணது கூட தப்புன்னு இப்போ வர ஃபீல் பண்ணிட்டு இருக்கேன் !! கால் எடுத்து இத சொல்லி உன்ன ஹர்ட் பண்ண விரும்பல..!! கெஞ்சி கேக்குறேன் பதில் சொல்லிரு..
என கண்ணீருடன் எழுதி முடித்தவள்.. அவனுக்கு அதை அனுப்பி வைத்துவிட்டு சென்றாள் வராத தூக்கத்தை பிடிக்க ...❤️
KAMU SEDANG MEMBACA
என் நெஞ்சின் தீயே..!
Romansa" நீ என்கூட இருந்தா வாழ்க்கைல தோத்து போய்டுவேன்னு பயமா இருக்கு.," உனக்கே தெரியும் ' யூ., என்றவனிடம் ' நிறுத்து ' என்பதை போல் சைகை செய்தாள் கண்ணீருடன்..!