கோடை விடுமுறைக்கு யாழினி தன் தாத்தா வீட்டிற்கு சென்றுவிட .. தேவ்வும் விஸ்வாவும் அங்கும் இங்கும் சுற்றி கொண்டிருக்க.. சஹா மட்டும் விக்கி , பிந்து , அருண் , நேஹா , அஜய் , யாசினியுடன் நன்றாக கொட்டம் அடித்தாள்..அன்று சஹாவின் தந்தை ருத்ரன் கேரம் விளையாட அனைவரையும் அழைத்தார்.. என்றும் போல்..மீதி இருந்த ஒரு இடத்திற்காக தேவ்வும் சஹாவும் சண்டையிட ஆரம்பிக்க.. ருத்ரன் சமாதானம் செய்து ஒரு ஆட்டத்திற்கு ஒருவர் என இருவரையும் மாற்றி மாற்றி அமர வைத்தார்..இப்படியே விடுமுறை முடிந்து , யாழியும் வந்துவிட மீண்டும் பள்ளிக்கு செல்ல தொடங்கினார்கள்..
அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை சஹா தன் தாயுடன் சேர்ந்து கேக் செய்து வைத்திருந்தாள்..அங்கு யாழியும் தேவ்வும் வர.. அவர்களிடம் ஆசையாய் அந்த கேக்கை காட்டி கொண்டிருந்தாள்.. அதை கையில் வாங்க முற்பட்ட தேவ் அதை கீழே போட்டுவிட அழுது கொண்டே அவனை திட்டிவிட்டு சென்றுவிட்டாள் சஹா.. தேவ்வும் குற்ற உணர்ச்சியில் அங்கே அமர்ந்து கொண்டான்.. பின்பு இரவில் அவள் தாய் வேறு கேக்கை கொடுக்க அங்கு தேவ் விஸ்வாவிடம் பேசி கொண்டிருப்பதை பார்த்த சஹா அவர்கள் இருவருக்கும் அதை ஊட்ட .. மகிழ்ச்சி ஆன தேவ் அவளை பார்த்து மென்மையாய் சிரித்துவிட்டு சென்றுவிட்டான்.. ஏனோ சஹாவிற்கு.. அவன் சிரித்தால் இவ்வளவு அழகா என தோன்றியது..இது அனைத்தையும் அறிந்த யாழி மறுநாள் சஹாவிடம் ஊட்டி விட்டியா என அன்று முழுதும் கேட்டு கொண்டிருந்தாள் ..
தேவ் தான் சொல்லி இருக்கக்கூடும் என சஹாவிற்கு தெரிந்தாலும்.. அவள் அமைதியாகவே இருந்தாள்..தேவ் யாழியிடம் அதிக பாசம் காட்டுவது சிறிது பொறாமையும் வருத்தமும் தந்தாலும்.. இருவரையும் ஒரே போலவே நடத்துவாள் சஹா..
அடுத்த வருடத்தில் யாழியின் தந்தைக்கு மாற்றல் வந்துவிட அவள் திருச்சியில் இருந்து சேலம் செல்ல போவதாக கூறினாள்.. சஹா மிகவும் சோர்ந்து போனாள்.. இருந்த ஒரே தோழியும் செல்கிறாள் என.. இரண்டு வாரத்தில் யாழினி சேலம் சென்றுவிட .. பொழுதுபோக்கிற்காக சமஸ்கிருத வகுப்பு செல்ல ஆரம்பித்தாள் சஹா..அங்கும் சிறிது நாட்களில் வந்து சேர்ந்தான் தேவ்.. ஆனால் அங்கும் சஹாவின் பள்ளியில் படிக்கும் ஸ்ரீ என்ற சிறுமியோடு நட்பாகி விட்டான்.. சஹாவிற்கு தான் அய்யோ என்று ஆனது.. இவன் ஏன் என்னிடம் ஒதுங்கியே போகிறான் என தினமும் நொந்து போனாள்..
அன்று சஹானா சைக்கிள் ஒட்ட கற்று கொண்டிருந்தாள்.. அவளுக்கு ஏனோ இன்று தான் கற்றுக்கொள்ள ஆசை வர அவள் அண்ணனுடன் ஒட்டி கொண்டிருந்தாள்.. அப்போது அங்கு வந்த தேவ் அவளை கலாய்க்க.. அவள் கோபமாக தானே ஓட்டுவேன் என கீழே விழுந்தாள்.. மறுமுறை கற்று கொள்கிற போது தேவ் சொல்லி கொடுத்தால் நல்லா இருக்குமே என அவள் மனதில் நினைக்க அவன் அதை படித்தது போல் நான் சொல்லி தரேன் என வந்தான்.. வலியும் மறைந்து மகிழ்ச்சி ஆகி போனாள் சஹா.. இருவரும் ஏனோ அன்றிலிருந்து ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதில் ஆர்வமாக இருந்தனர்....
அன்று சஹாவிற்கு பிறந்தநாள் மாலையில் கேக் வெட்டுவதற்கு மஞ்சள் நிற உடையில் கூந்தலை விரித்துவிட்டு காதில் ஆடும் வலயங்களுடன் குண்டு கண்ணங்களுடன் குட்டி தேவதையாய் தயாராகி நின்றாள் அவள்.. அப்போது அங்கு வந்த பக்கத்து வீட்டு சிறுவன் அந்த ஆடை அவளுக்கு அழகாய் இல்லை என கூறிவிட அழுதுகொண்டே இருந்தாள் சஹானா. தேவ் அவளிடம்..,
"இந்த ட்ரெஸ் ரொம்ப சூப்பர் உனக்கு".. கேக் கட் பண்ண வா.. பர்த்டே அன்னைக்கு அழ கூடாது.. என கூற..
"அவன் நல்லா இல்லைன்னு சொல்றான் ..நா வரல"
"நான் நல்லா இருக்குன்னு சொல்றேன் நம்ப மாட்டியா ?" வா என கையை நீட்டி அழைக்க..அவன் பின்னே சென்றவள்..சோகத்தின் தடமே இல்லாமல் மகிழ்ச்சியாக சுற்றி கொண்டிருந்தாள்..
அன்றிலிருந்து எதுவாகினும் தேவிடம் கேட்டு விட்டு செய்ய வேண்டும் என்றும் அவனோடு இன்னும் நட்பாய் இருக்க வேண்டும் என்றும் தோன்ற அதையே பின்பற்றவும் செய்தாள் சஹானா..❤
YOU ARE READING
என் நெஞ்சின் தீயே..!
Romance" நீ என்கூட இருந்தா வாழ்க்கைல தோத்து போய்டுவேன்னு பயமா இருக்கு.," உனக்கே தெரியும் ' யூ., என்றவனிடம் ' நிறுத்து ' என்பதை போல் சைகை செய்தாள் கண்ணீருடன்..!