3 . சஹா..❤

602 36 52
                                    

அந்த ஞாயிற்றுக்கிழமை மாலையன்று .. வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து பாட்டு கேட்டுக் கொண்டிருந்தார்கள் விஸ்வா , தேவ் மற்றும் சஹா..

திடீரென தேவ் சஹாவிடம் ,

ஒய் ! சஹா .. அப்போவே கேக்கணும்னு நெனச்சேன்.. ஸ்ரீ உன் கிளாஸ் ஆ ??

அவனை முறைத்தவள்.. " இல்ல ஏன் கேக்குற ? "

சும்மா தெரிஞ்சிக்க தான் !

அவளபத்தி தெரிஞ்சி என்ன பண்ண போற ??

இவ்வளவு நேரம் பாட்டில் மூழ்கி இருந்த விஸ்வா.. இவர்கள் பேச்சை கேட்டுவிட்டு சஹாவிடம்.. " நம்ம ஸ்கூல் பஸ்ல வருவாளே அவளா ? " என கேட்க..

சஹாவை முந்தி கொண்டு தேவ் " அவளே தான் அண்ணா " உனக்கு தெரியுமா ? என்று கேட்டுவிட்டு.. என்ன அழகு ! என்ன கலரு ?.. என கூற..

மீண்டும் அவனை பலமாய் முறைத்தாள் சஹானா..

அவள் முறைப்பதை கண்ட தேவ் மேலும் ஏதேதோ உலறி கொண்டிருக்க..விருட்டென அங்கிருந்து ஓடினாள் சஹா..

சிரித்த தேவ் .. இன்னொரு நாள் மாட்டுவ..அப்போ இருக்கு உனக்கு என்று நினைத்துக்கொண்டு சென்றுவிட்டான்..

மீண்டும் சிறிது நாட்களில் அவளிடம் ஸ்ரீயை பற்றி அவன் கேட்க.. கடுப்பான சஹானா.. என்ன இப்போ உனக்கு அவ பத்தி தெரியணும் ..? கேளு சொல்றேன் .. என கூறிவிட..

இவள வம்பு இழுக்கலாம் பாத்தா முடியாது போலையே.. ஹ்ம்ம ? என்ன பண்ணலாம் என யோசித்தவன்.. சட்டென அவளிடம்

" அவள ப்ரொபோஸ் பண்ண போறேன் " என கூலாக கூற..

திடுகிட்டாலும்..அதை காட்டிக்கொள்ளாமல் சஹா.." டேய் ! 14 வயசுல என்னடா லவ் வேண்டி கிடக்கு உனக்கு.. !" ..வேற வேலை இருந்தா பாரு என அவனை துரத்த..

அவனோ "நீ ஐடியா குடு சஹானா ".. என கூற..

டேய் .. அடிச்சிட போறேன்.. பொய்ரு ஒழுங்கா..
லவ் பண்ண தெரிஞ்சவங்க ப்ரொபோஸ் பண்ணவும் கத்து வெச்சிருகணும் .. இப்போ இடத்த காலி பண்ணு என கூறினாள்..

என் நெஞ்சின் தீயே..! Where stories live. Discover now