அன்று காலை நடந்தவைகளை நினைவு கூர்ந்தாள் சனா.,
தேவ் அவளுக்கு தெரியாமல் அவள் தந்தை தாய் அண்ணன் என எல்லோரையும் வீட்டிற்கு அழைத்து இருந்தான்.திடீரென அவர்களை எதிர்பாராத சனா முழிக்க , " வாங்க அங்கிள் , வா அண்ணா , என வரவேற்றான் அவன்.
என்ன பா ஒண்ணுமே சொல்லாம வந்து இருக்கீங்க ? எதும் முக்கியமான விஷயமா ? " என்றாள் அவள்.
" தேவ் தான் மா வர சொன்னான் , சரி எதாவது இருக்கும்ன்னு நினைச்சு கிளம்பி வந்துட்டேன் .
தேவ்வை திரும்பி ஒரு பார்வை பார்த்தவள் , " எதுக்கு கூப்பிட்ட அவுங்கள ?"
" என்ன சனா நீ இப்டி பேசுற ? நீ என்னை லவ் பண்ற , நானும் உன்ன லவ் பண்றேன் ! அதான் அவங்க கிட்ட ஃபர்ஸ்ட் சொல்லிடலாம்ன்னு வர சொன்னேன் ."
" அப்பா ! நான் கூப்டா தான் நீங்க வரனும் , யாரோ எவரோ கூப்டாங்கன்னு உங்களை யாரு கிளம்பி வர சொன்னா ?
" ஏன் டா இப்டி ஹார்ஷ் ஆ பேசுற ? " என்றார் அவர்.
" அப்பா அவன் தான் எதோ வேலை இல்லாம உங்களை கூப்பிட்டு இருக்கான் நீங்களும் உடனே கிளம்பி வந்துட்டீங்க. " என கூறியதையே மீண்டும் கூறி கொண்டு இருந்தாள்.
இவனுக்காக தன நீ கல்யாணம் வேணாம்ன்னு இத்தன நாள் சொன்ன ? இப்போ அவனே உன்ன கல்யாணம் பண்ணிக்க தான் விருப்ப படுறான் அப்புறம் என்ன டா பிரச்சினை உனக்கு ?
ஓஹ் துறை கல்யாணம் பண்ணிக்க விருப்பம்ன்னு சொன்னாரா ? எனக்கு கல்யாணம் வேணாம்ன்னு சொன்னேன் , ஆனா இவன காரணம் காட்டி நான் வேண்டாம்ன்னு சொல்லலியே . எனக்கு இவன் வேண்டவே வேண்டாம் பா ! பிளீஸ் ."
" அன்கிள் அவ எதோ கோவத்துல பேசுறா . அதுவும் இல்லாம நான் நேத்து தான் தெரிஞ்சு கிட்டேன் அவ இன்னும் என்ன லவ் பண்றான்னு ,. கொஞ்சம் அவசர பட்டுட்டென் ! சாரி அங்கிள் , உங்கள வேற அலைய விட்டுட்டென்." என்றான் அவன்.
KAMU SEDANG MEMBACA
என் நெஞ்சின் தீயே..!
Romansa" நீ என்கூட இருந்தா வாழ்க்கைல தோத்து போய்டுவேன்னு பயமா இருக்கு.," உனக்கே தெரியும் ' யூ., என்றவனிடம் ' நிறுத்து ' என்பதை போல் சைகை செய்தாள் கண்ணீருடன்..!