11 . சஹா..❤️

487 26 22
                                    

அன்று சனாவின் பிறந்தநாள்..அவளும் தேவ்வும் படத்துக்கு செல்லலாம் என முடிவு செய்து இருந்தனர்..

டேய் நீ சொன்னன்னு இல்லாத கிளாஸ் இருக்குன்னு பொய் சொல்லி வந்துர்க்கேன்..மவனே வராம போன கொத்து கறி தான் என் கைல..என இன்ஸ்டிட்யூட் வாசலில் நின்று ஃபோனில் அவனிடம் மிரட்டிக்கொண்டு இருந்தாள்..

வந்துருவேன் வந்துருவேன்.. நோ கவலை ! என கூறினான் அவன்..

10 மணிக்கு வந்துவிடுவேன் என கூறி இருந்த தேவ் 10.30 ஆகியும் வரவில்லை என்றதும் அவனுக்கு கால் செய்தாள் இவள்.. ஏற்கவில்லை என்றதும் மீண்டும் செய்தாள்..10.50 உம் ஆகி விட..போச்சு..இவன் இருக்கானே பிறந்த நாள் அதுவும் அழுவ விட்டுடுவான் போலயே..என கலங்கிய கண்களை மறைத்து கொண்டே மீண்டும் முயற்சித்தாள்.. ஹ்ம்ம் ஹ்ம்ம் பதில் இல்லை..

மேலும் ஐந்து நிமிடம் சென்று இருக்க அவனிடம் இருந்து அழைப்பு வந்தது ..

வா அந்த தெருவுக்கு நான் வந்துட்டேன்..என கூறிவிட்டு போனை அனைத்து விட்டான்.. பிறகு யார் மொத்துகள் வாங்குவது..

வந்தவள் அவனை கடந்து சென்று கொண்டே இருக்க சரி போதும் கோவம் வந்து ஏறு கெஞ்சி கேக்குறேன் என எப்படியோ சமாதானம் செய்து அவளை அழைத்து கொண்டு சென்றான் ..

படம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே இவள் கைகளை பிடித்து கொண்டவனை முறைத்தவள் அவன் கைகளை உதற.. பிளீஸ் டி பாவம் ல என கூறி பிடித்து கொண்டான் ..

கொடுமையாக படத்தின் கதாநாயகன் இறந்து விட, தலையில் கை வைத்த சனா எதோ சத்தம் கேட்டு திரும்பி பார்க்க அங்கு தேவ் அழுது கொண்டிருந்தான்..

சிரித்து கொண்டவள்..டேய் லூசு இதுக்கு போய் அழுவுற..பாப்பா மாறி.. கண்ண தொடை அய்யோ அய்யோ..என கூறினாலும் அவன் கைகளை பிடித்து கொண்டாள்..

பின்பு படம் முடிந்து சாப்பிட சென்றார்கள் இருவரும்..அங்கு சாப்பிடும் போது அவள் கையை பிடித்தவன் ஒரு பிரேஸ்லெட் எடுத்து அவள் கையில் மாட்டி விட்டு ..லவ் யூ சனா என அவள் தலையை தடவி விட்டு அவளை பார்த்து சிரித்தான்..

என் நெஞ்சின் தீயே..! Where stories live. Discover now