16 . சஹா..❤️

307 21 15
                                    

உலகமெல்லாம் உனதல்லவா ?
உன் இதயம் மட்டும் எனதல்லவா ?? ❤️

அன்று ஒரு நாள் ,

" தேவ் கேட்டா கோச்சிக்க மாட்டியே " என அவள் பீடிகை போட ,


சொல்லு சஹானா ' என்ன விஷயம் ? என்றான் அவன்.

" உனக்கு ஆக்ட்சுவல் ஆ என்ன போஸ்ட் உங்க டிபார்ட்மெண்ட் ல ? ' என்றாள் அவள் .

பெரிதாக சிரித்தவன் , கான்ஸ்டபிள் என்றான் .

ஒஹ் அப்படியா ஓகே " என்றாள் அவள்.

அடி பாவி என்ன சொன்னாலும் நம்புறியே எடுத்த உடனே போய் பெரிய சீட் ல உக்கார வெய்க்க மாட்டாங்க டா ! போன புதுசுல நான் சப் இன்ஸ்பெக்டர் இப்போ மூணு மாசம் முடிஞ்சுது இல்லையா ? அதுனால நான் இன்ஸ்பெக்டர் , நான் கொஞ்சம் நல்லா நடந்துக்கிட்டு கஷ்டமான சில கேஸ் எல்லாம் முடிச்சா ஏசிபி ஆக்க வாய்ப்பு இருக்கு , ஆனா நாள் ஆகும் . எனக்கு அது விட கிரைம் பிராஞ்ச் போகனும் அதான் ஆசை. பார்ப்போம் ! என பெரு மூச்சு விட்டவன் , தன் அறைக்கு சென்றுவிட்டான்.

அவள் விடாமல் அவன் பின்னோடு சென்று , " கிரைம் பிராஞ்ச் போக என்ன செய்யணும் ?" என ,

அது அவ்ளோ சீக்கிரம் நடக்காது டா " அதுக்கு நான் ரொம்ப நிறைய நிறைய உழைக்கணும் என்றான் ,

உழைச்சு தொலையேன் ! யாரு வேண்டாம்ன்னு சொன்னாங்க இப்போ ?? என்றாள் அவள் .

என்ன பேசிஸ் ல கிரைம் பிராஞ்ச் அப்ளை பண்ணனும் சொல்லு ? என

இங்க வா என அழைத்தவன் , தான் ஏற்கனவே வைத்திருந்த கூகுளில் சர்ச் செய்து சிலதை காட்ட ,

புரிந்து கொண்டவள் , சோ நீ 6 மாசம் ஒர்க் முடிச்சாலே அப்ளை பண்ணலாம்ல ? அப்பறம் என்ன ? என்க ..,

அதுக்கு நம்ம ரேட்டிங் நிறைய இருக்கணும் , நான் கஷ்டமான கேஸ் சால்வ் பண்ணாலும் எத்தன கேஸ் க்ளோஸ் பண்ணி இருக்கேன் ? அது தான் அவங்களுக்கு முக்கியம் .
அது இல்லாம பெரிய போஸ்ட் ல இருக்க ஒருத்தவங்க என்னைய ரெகமெண்ட் செய்யணும் .

என் நெஞ்சின் தீயே..! Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin