19 . சஹா..❤️

333 23 4
                                    

காண்பதெல்லாம் காதலடி..❤️

அவளை விட்டுவிட்டு வந்தவனுக்கு அன்று ஏனோ நேரம் நகர்வது போல் தெரியவில்லை.எத்தனையோ முறை அவள் ஊருக்கு சென்று இருக்கிறாள் , ஆனால் என்றும் இல்லாத ஒரு வெறுமையை அன்று உணர்ந்தான் அவன். அடுத்த நாள் காலை காஃபி குடித்து கொண்டே தன் வாட்ஸ்அப் செயலியை பார்த்தவன் அவள் ஸ்டேடஸ் ஐ பார்த்து மயங்கி விட்டான்.அவள் புடவை கட்டி கூந்தலை பின்னி இருக்க அவள் முடி அவள் முட்டியை தொட்டது , அவள் எங்கோ பார்த்திருக்க , அவளுக்கே தெரியாமல் அவளை யாரோ காண்டிட் ஆக ஃபோட்டோ எடுத்து இருந்தார்கள்.அவளை பார்க்க பார்க்க மனதில் நினைத்து கொண்டான் " தேவதை " என.

அந்த போட்டோவை ஃப்ரேம் செய்ய ஆசை பட்டவன் அதை கடையில் கொடுத்து விட்டு வேலைக்கு செல்ல , நள்ளிரவு வீட்டிற்கு வந்தவனுக்கு அப்போது தான் ஃபோட்டோ ஞாபகத்தில் வந்தது . அடுத்த நாள் மறவாமல் அதை வாங்கி வந்தவன் அதை மாட்டுவதற்கு ஆணி அடிக்கும் நேரம் கையில் தெரியாமல் பட்டு விட , முதலுதவிக்காக அவள் அறையை எட்டி பார்த்தவன் அதில் பூட்டு போட்டு இருப்பதை கண்டு , வெளியில் சென்று மருந்து போட்டு விட்டு வந்து போட்டோவை மாட்டியவன் ஹாலில் அமர்ந்து கொண்டான்.எதோ நினைத்து கொண்டு இருந்தவன் அவள் ரூமை பார்க்க அதில் பூட்டு இருந்ததே தவிர சரியாக பூட்டாமல் இருந்தது , அதை எடுத்து வைக்க நினைத்தவன் சட்டென கதவை திறந்து கொண்டு உள்ளே செல்ல , மூச்சு நின்று போனது அவனுக்கு.

ரூம் அவளுடையது என பெயர் இருந்தாலும் , அந்த அறை முழுதும் அவனே நிறைந்து இருந்தான்.அவனுக்கு பிடித்த அனைத்தும் அங்கு இருந்தது.அவனுக்கு பிடித்த காம்போவான யெல்லோ கிரே கலரில் பெய்ண்ட் செய்ய பட்டு இருந்தது அவள் அறை , நாலு சுவற்றில் , மூன்று பக்கம் அவன் புகைப்படத்தை ஒட்டியோ மாட்டியோ வைத்து இருந்தாள்.ஒரு பக்கம் அவன் குழந்தை பருவம் , ஒரு பக்கம் அவன் வளர வளர எடுத்தது , ஒரு பக்கம் அவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்து கொண்டதை நினைவுகளாக சேர்த்து வைத்து இருந்தாள்.தவறியும் அவர்கள் பிரிந்ததற்கு பிறகு இருந்த அவன் புகைப்படம் எதுவும் அங்கு இல்லை. அவனுக்கு பிடித்தது போல் தரையில் மெத்தை விரிக்க பட்டு இருந்தது கட்டில் இல்லாமல்.அதன் அருகில் ஒரு மேஜை இருக்க அதில் நிறைய டைரி இருந்தது.

என் நெஞ்சின் தீயே..! Wo Geschichten leben. Entdecke jetzt