22 . சஹா..❤️

291 20 8
                                    

வீட்டு கதவு தட்டும் சத்தம் கேட்க அதை திறந்தவள் பார்த்தது கலைந்த தலை , முகத்தில் இரண்டு இடத்தில் பிளாஸ்டர் என நின்று கொண்டிருந்த தேவ்வை தான்.

"என்னடா ஆச்சு ? " என பதறியவளை அமைதி படுத்தியவன் அவளை இழுத்துக் கொண்டு உள்ளே வந்தான்.வந்தவன் தன் சட்டையை கழட்டி கையின் மேல் பகுதியை காட்ட , அவள் கண்களில் இருந்து இரண்டு நீர் முத்து வெளியில் வந்தது .

"டேய்  தங்கம் ஏன் அழலாம் செய்ற ? என அவன் இன்னொரு பக்கம் பதற ,அவள் அதை கண்டுக்கொள்ளாமல் ,

"கன்ஷாட்டா ? "

ஆமா ! என்றவன் ஒரு புல்லட்டை எடுத்து காட்ட ..," யார பிடிக்க போன ? பிடிச்சுட்டியா ? " என  ஆர்வமாய் கேட்க

" இல்லையே டா , " என்றான் அவன் சோகமாய்.

"சரி டா பிடிச்சிடுவ ! கவலை படாத ."

" என்னனா , ஒரு 12 நாள் இருக்கும் , ஸ்டேஷன்னுக்கு ஒரு 30 - 32 வயசுல ஒருத்தர் வந்து acpய பார்க்கணும் ஒரு கேஸ் குடுக்கணும்ன்னு சொன்னாரு , நானும் அவர்கிட்ட கூட்டிட்டு போய் விட்டுட்டு வந்தேன் . கொஞ்ச நேரத்துல அவரு போன உடனே acp என்ன கூப்பிட்டு ,
" இப்போ வந்தவர் பேர்  நீலகண்டன் , அவர் குடுத்த கேஸ்ஸ நான் சொல்றேன் , கீப் இட் கான்ஃபிடன்ஷியல்.,பிளஸ் நீ இத பத்தி எதாவது கேள்வி பட்டு இருக்கேனா சொல்லுன்னு சொன்னாரு.

" ***** மெடிகல்ஸ்ல இவரு 8 நாளைக்கு முன்னாடி ஃபீவர் டேப்லெட்ஸ் வாங்கி இருக்காரு , அத அவரு 3 வயசு பையன்னுக்கு குடுத்து இருக்காங்க அவரோட மனைவி , கரெக்ட்டா 3 நாள்ல அந்த பையன் இறந்துட்டான்.,அதே டேப்லெட்ஸ அவரோட மனைவியும் ரெண்டு வேலை சாப்பிட்டு இருக்காங்க அவங்களுக்கு அத தினம் சாப்பிடணும் போல இருந்து இருக்கு , அதுனால அவுங்க தினம் 2 மாத்திரை சாப்பிட ,  3 நாள்ல மயங்கி சுயநினைவு இல்லாம பொய்ட்டாங்க , ஹாஸ்பிடல் போனப்போ அவுங்க உடம்புல ட்ரக் இருக்குன்னு டாக்டர்ஸ் சொல்லிட்டாங்க ,  அவங்க பையன் ரொம்ப சின்னவன் அதுனால வீரியம் தாங்காம இறந்துட்டான் . நீலகண்டன் உடனே அந்த மெடிகல்ஸ் போய் , அந்த ஓனர்ர போட்டு அடிச்சு இருக்காரு , அவரு பயந்து தனக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு சொல்லி , அது தன்னொட பிரச்சனை இல்லனு விலகிடுறாரு.இப்போ நீலகண்டன்னுக்கு யாரு இத பண்ணாங்கன்னு தெரியணும்."

என் நெஞ்சின் தீயே..! Where stories live. Discover now