அந்த மாலை நேரம்.. தன் வீட்டின் மொட்டை மாடியில்.. சுற்றி ஆடி கொண்டிருந்தாள் அந்த பத்து வயது சிறுமி.. அவள் " சஹானா ".. அதே போல் எதிர்த்த வீட்டில் ஒரு சிறுவனுடன் விளையாடி கொண்டிருந்தாள் யாழினி..இருவரும் திடீரென பார்த்து கொண்டு ... பின் சிரித்து கொள்கிறார்கள்..பின்பு சஹானா தன் வீட்டிற்கு செல்ல.. அடுத்த நாள் இருவரும் தெரிந்து கொள்கிறார்கள் இருவரும் ஒரே பள்ளியில் சேர்ந்து இருக்கிறார்கள் என்று..சில நாட்களிலேயே இருவரும் இணைபிரியா தோழிகள் ஆகிவிட்டார்கள்.. இருவரும் ஒரே வண்டியில் பள்ளிக்கு செல்வதும்.. விடுமுறை நாட்களில் விளையாடுவதுமாக..இருக்கிறார்கள்.. இருவரும் ஐந்தாம் வகுப்பில் படித்தாலும்.. யாழினி படிப்பை பற்றி யோசிக்காமல்.. நடனம் பற்றி மட்டுமே சிந்தனை செய்வாள்.. நடனம் ஆடுவது அவளுக்கு மிகவும் பிடித்த விடயம் ஆகும்.. ஆனால் அவள் பயிற்சி வகுப்புகள் செல்ல மாட்டாள்..சஹானா பயிற்சி வகுப்பிற்கு சென்றாலும்.. நடனம் மேல் பைத்தியமாக இருக்க மாட்டாள்..வகுப்புகளில் ஆடுவதோடு நிறுத்தி விடுவாள்..வீட்டில் அவள் செய்வது படிப்பது தன் அண்ணனோடு சண்டை இடுவது .. உறங்குவது.. இது மட்டுமே அவள் பிடித்து செய்யும் வேலைகள்..இவர்கள் இருவரின் நட்பிற்கு நடுவில் வந்தான் அவன்.. "தேவஜித் "அவன் இருவருக்கும் அருகில் உள்ள வீட்டிற்கு புதிதாக வந்திருந்தான்..அவனும் இவர்கள் வயதே என்றாலும்.. அவன் சஹாவின் அண்ணன் விஸ்வாவிற்கே தோழன் ஆகிறான்..இரு சிறுமிகளிடம் நன்றாக பேசினாலும்.. யாழிடம் சிறிது அதிகமாக நட்பு பாராட்டினான்.. இதில் சஹாவிற்கு சிறிது வருத்தமாக இருந்தாலும்.. அவள் எதுவும் கூற மாட்டாள்..சிறிது நாட்களிலே.. சஹாவும் தேவும் அடிக்கடி சண்டையிட தொடங்கினர்.. எங்கு ஆரம்பித்தாலும் சண்டையிலே முடித்தனர்..ஆனால் யாழியிடம் தெரிந்தும் சண்டையிட மாட்டான் தேவ்..இப்படியே ஒரு வருடம் ஓடிவிட..இவர்களின் முழு ஆண்டு தேர்வு முடிந்து விடுமுறையில் இருந்தனர்..இப்படிபட்ட நேரங்களில் சஹாவும் விஸ்வாவும் யாரையும் கண்டு கொள்ள மாட்டார்கள்.. அவர்களின் பட்டாளம் அவர்களை அவ்வளவு பிஸியாக வைத்திருப்பார்கள்..தங்கள் தந்தை வழி சொந்தங்கள் வீட்டிற்கு வந்தால் அனைவரையும் மறந்து போவார்கள் அண்ணனும் தங்கையும்.. அன்று சஹா தொலைகாட்சி பார்த்துக்கொண்டிருக்க அங்கு வந்தான் விக்னேஷ்.. அவள் அன்பு அண்ணன் .. சேர்ந்து பிறக்கவில்லை என்றாலும் ஒருவர் மேல் ஒருவர் உயிரே வைத்திருந்தார்கள்.. அவனை பார்த்தவுடன் ஓடி சென்று அனைத்து கொண்டாள் சஹா.. அவனுக்கும் தங்கை இருந்தாலும்.. சஹாவின் மேல் தனி அன்பு எப்போதும்..தேவ் அன்று சஹா வீட்டிற்கு வந்தது முதல்.. விக்னேஷை முறைத்து கொண்டிருந்தான்.. சஹா விக்கியுடன் இருப்பதை பார்க்க ஏனோ தேவிற்கு பிடிக்கவில்லை.. யாரென தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்து சஹாவை அழைத்தான்
ஏய் .. சஹா.. இங்க வா..
ம்ம் ! என்ன ?
யாரவன்..? அவன்கிட்ட என்ன பேசுற..?
அவனா.. அவங்க சொல்லு.. நம்மல விட 4 வயசு அதிகம்..
சரி அவங்க.. சொல்லு யாருனு ?! உன் அண்ணனா ?
தேவ் அப்படி கேட்கவும்.. அவள் குறும்புத்தனம் தலை தூக்க.. அவங்க அண்ணா இல்ல சின்ன வயசுலே சொல்லிட்டாங்க எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணுவாங்க.. பெரியவங்க ஆகிறப்போ..
பொய் சொல்ற..
நெஜமா தேவ்..நம்பு..!
அன்றே ஏனோ அந்த விக்கியை பிடிக்காமல் போனது... நம் தேவிற்க்கு..
YOU ARE READING
என் நெஞ்சின் தீயே..!
Romance" நீ என்கூட இருந்தா வாழ்க்கைல தோத்து போய்டுவேன்னு பயமா இருக்கு.," உனக்கே தெரியும் ' யூ., என்றவனிடம் ' நிறுத்து ' என்பதை போல் சைகை செய்தாள் கண்ணீருடன்..!