அவள் வாசலில் நிற்பதை பார்த்தவன் குஷி மிகுதியில் "வூஹு" என கத்த., அவனை தரதர என இழுத்து வந்தவள் கார்க்குள் ஏற்றினாள்.
" அப்போ என்னோட பைக் ? " என அவன் கேட்க ,
"வந்து எடுத்துக்கலாம் வா டா" என்றவள் கிளம்பி இருந்தாள்.
" என்ன ரொம்ப ஸ்பெஷல்லோ சேரி லாம் பயங்கரமா இருக்கு ?! , வாட்ஸ் தெ மேட்டர் டார்லிங் ?!."
தெரிஞ்சு இருந்தா நானும் வீட்டுக்கு போய் ட்ரெஸ் மாற்றி இருப்பென்ல ?!""இத விட நல்ல ட்ரெஸ் உன்கிட்ட இல்லவே இல்லை " என அவன் காக்கி உடையை கூறியவள் நேராக சென்று நிறுத்தியது ஒரு ஷெட் போன்ற இடத்தில்.
அவனை இறங்க சொல்லியவள் , தானும் இறங்கி வந்து ரிமோட் போல் ஒன்றை அவன் கையில் திணிக்க , ஒன்றும் புரியாமல் அவளை பார்க்க
"ஓபன் பண்ணு , " என கூறினாள்
அதில் இருந்த பட்டன்னை தொட்டான் அவன் , அந்த ஷெட் போன்ற இடம் திறந்து கொள்ள உள்ளே அவன் வாழ்நாள் ஆசையான ஜாகுவார் கார் அவனுக்கு பிடித்த கருப்பு நிறத்தில் நின்று கொண்டு இருந்தது.
ஒன்றும் புரியாமல் உள்ளே சென்று , அந்த காரை சுற்றி சுற்றி பார்த்தவன் , தன் கைகளால் வருடி கொண்டே இருந்தான்.
அவன் அருகில் வந்த சஹானா " உன் கார்ல என்ன ஒரு லாங் ட்ரைவ் கூட்டிட்டு போறியா தேவ் ?! " என கேட்க.,
உணர்ச்சிவசபட்டவன் , கண்களில் இருந்து கண்ணீர் கொட்ட , அவள் கைகளை பிடித்து கொண்டு போய் அந்த பக்க கதவை திறந்தவன்.,அவள் உள்ளே ஏறும் முன்பு அவளை தூக்கி உள்ளே அமர வைத்தான் , அதோடு நில்லாமல் அவள் இதழ்களில் அழுத்தமாய் ஒரு முத்தத்தை கொடுத்தான்.
கதவை மூடியவன் , அவன் பக்க இருக்கையில் வந்து அமர்ந்து காரை ஸ்டார்ட் செய்ய , அவன் பெரிய பெரிய ஆசைகளில் ஒன்றான ஜாகுவார் இன்று அவன் கையில் பறந்தது.
இருவரும் ஊரை சுற்றி விட்டு நடு இரவில் தான் வீடு திரும்பினர்.
நுழைந்த உடன் அவளை அணைத்து கொண்டவன் , " என்னென்னமோ தர்றியே சனா , நான் ஆசை படுற இன்னும் ஒரே ஒரு விஷயத்தை தர மாட்டியா ?! "
VOUS LISEZ
என் நெஞ்சின் தீயே..!
Roman d'amour" நீ என்கூட இருந்தா வாழ்க்கைல தோத்து போய்டுவேன்னு பயமா இருக்கு.," உனக்கே தெரியும் ' யூ., என்றவனிடம் ' நிறுத்து ' என்பதை போல் சைகை செய்தாள் கண்ணீருடன்..!