துலாவும்….உன் பார்வை நெஞ்சில்
உலாவும்…அதில் தோற்று போகும்
நிலாவும்…..நீ உலகின் எட்டாம் அதிசயம்...❤️என சனாவின் ஃபோன் பாட்டை வெளியிட்டு கொண்டிருக்க..அதை கலைத்தது தேவ்வின் அழைப்பு .,
சொல்லு என்ன !?
எனக்கு டெங்கு டி இப்போ தான் டெஸ்ட் பண்ணேன்..ரொம்ப முடியல .. அதான் உன்கிட்ட சொல்லிடலாம்ன்னு கூப்பிட்டேன்..
ஹே என்னடா சொல்ற..சரி சரி பயம் வேணாம் ஓகே ?! ஃபோன் பார்க்காத ..நிறைய ரெஸ்ட் எடு.!
ஓகே ! உன் அம்மா வந்தாங்க மார்னிங் வீட்டுக்கு.. அம்மாக்கு முடியலன்னு பார்த்திட்டு போக! பார்த்தா எனக்கும் முடியல இப்போ ..!
சரி சரி தூங்கு..! என்றவள் அவள் அம்மாவிடம் .,
மா தேவ் வீட்டுக்கு போனியா ? என கேட்க
ஹ்ம்ம் ஆண்டிக்கு முடியல ஜூரம்ன்னு சொன்னாங்க அதான் பார்துட்டு வந்தேன்..ஏன் ?
ஒன்னும் இல்ல ! என அங்கிருந்து சென்று விட்டாள்..
சனா எதையும் அலட்டாத பேர்வழி.! எது வேணா வரட்டுமே என இருப்பவள்..ஆனால் தேவ்விடம் அப்படி இல்லை..!
அவனுக்கும் இரண்டு வாரத்தில் சரி ஆகிவிட மீண்டும் காலேஜ் செல்ல ஆரம்பித்தான்..!
அன்று தீபாவளி.! எப்போதும் தேவ் வீட்டுக்கு விஷ்வாவும் சனாவும் செல்வது வழக்கம்..
அன்றும் செல்ல அவளை பார்த்த தேவ்வின் தாய்..ஹே சனா வா வா வா எப்டி இருக்க ?? என வினவ..அவளும் சிரித்து கொண்டே கண்களை சுழட்டினாள்..
பின்பு விஷ்வாவிடம் நலம் விசாரித்துவிட்டு அவர் உள்ளே செல்ல..அப்போது தான் எங்கோ ஊர் சுற்ற சென்று இருந்த தேவ் வீட்டிற்கு வந்தான்..!
இவளை பார்த்தவன் உள்ளே அவன் அம்மாவிடம் சென்று பாத்திரங்களை உருட்ட.. சத்தம் கேட்டு விஷ்வா எட்டி பார்த்தான்..,
வெளியில் வந்த தேவ் கையில் இரண்டு கிண்ணமும் அதில் குலாப் ஜாமூன் உம் இருக்க .,அதை இருவருக்கும் கொடுத்துவிட்டு அருகில் அமர்ந்து கொண்டான்..
BINABASA MO ANG
என் நெஞ்சின் தீயே..!
Romance" நீ என்கூட இருந்தா வாழ்க்கைல தோத்து போய்டுவேன்னு பயமா இருக்கு.," உனக்கே தெரியும் ' யூ., என்றவனிடம் ' நிறுத்து ' என்பதை போல் சைகை செய்தாள் கண்ணீருடன்..!