25 . சஹா..❤️

382 22 12
                                    

அந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் ரூஃப் டாப்பில் அமர்ந்து உணவு அருந்தி கொண்டிருந்தார்கள் சனாவும் தேவ்வும்.

தேவ் சாப்பிட்டு முடிக்கும் முன்பே சாப்பிட்டு முடித்தவள் , ஐஸ் கிரீம்மை எடுத்து கொண்டு பால்கனி போல் இருந்த இடத்தில் சென்று வேடிக்கை பார்த்தாள்.

ஐந்து நிமிடம் கழித்து வந்து அவள் அருகில் நின்றவன் அவளை பார்க்க.,
அவளும் அவனை பார்த்து கொஞ்சம் சிரித்தாள். இரண்டு நிமிடம் கழித்து அவனிடம் ,

" இந்த ரூஃப் டாப்ல இருந்து பாதி ஊரே தெரியுதுல தேவ் , பியூட்டிஃபுல் வியூ ! உனக்கு என்ன தோணுது ? " என அவள் கேட்க , எங்கோ வெறித்த பார்வை பார்த்துக் கொண்டிருந்தவன்  "இப்போதைக்கு ஒன்னு உன்ன இப்படியே கீழ தள்ளி விடனும்ன்னு தோணுது , இல்லனா நான் குதிக்கணும்ன்னு தோணுது " என்றான் அவன்.

ஒரு நிமிடம் அதிர்ந்தவள் கையில் வைத்து இருந்த ஐஸ் கிரீம் கிண்ணத்தை கீழே போட்டு விட , அவன் கூறியதை மறுபடி அசை போட்டுவிட்டு அவனை உலுக்க

" என்ன சொன்ன ? என்றான் அவன் .

" நான் என்ன சொன்னேன் , நீ தான் சொன்ன " , என்றவள் பில் செட்டில் செய்து விட்டு கீழே போட்ட கிண்ணத்துக்கும் சேர்த்து பணத்தை கொடுக்க , அவர்கள் அதை மறுத்துவிட்டனர் .

காரை தானே ஒட்டியவள் வீட்டிற்கு வந்தவுடன் , கிட்ட தட்ட உள்ளே ஓடினாள். அவர்கள் அறையின் டிவியில் இருக்கும் நெட்ஃப்ளிக்ஸ் தொடர்களை எடுத்து பார்த்து , சிறிது நேரத்தில் ஒரு மருத்துவரிடம் ஃபோன் செய்து எதையோ கேட்டாள். அடுத்த நாள் அவரிடம் அப்பாயின்மெண்ட் வாங்கிவிட்டு ஹாலில் அமர்ந்து இருந்தவனின் அருகில் வந்து அவனை அணைத்து கொண்டாள்.

அவன் பதிலுக்கு அணைத்து கொள்ளாததை கவனித்தவள் , அவன் முகத்தை பார்க்க , மீண்டும் எங்கோ வெறித்து கொண்டு இருந்தான் , அவனை ஒரு முறை வேகமாக அரைந்தவள் , இன்னொரு முறை அவனை அணைத்து கொள்ள , அவன் எதுவும் புரியாமல் அவளை இம்முறை அணைத்து கொண்டான்.

என் நெஞ்சின் தீயே..! Wo Geschichten leben. Entdecke jetzt