அன்று முழுதும்.. அவளோடு கை கோர்த்ததையே நினைத்துக் கொண்டிருந்தான் தேவ்..அப்போது அவனை அழைத்தாள் சஹானா..
சொல்லுங்க.. சாப்டாச்சா ??
ஹ்ம்ம் ! நீ டா ??
ஆச்சு.. என்ன விஷயம் ? கால் பண்ணிருக்க ?
சும்மா தான்..
சரி.! அப்போ பேசு..
அவளும் ஸ்கூல் கதைகளை கூறிக்கொண்டிருக்க சிறிது நேரம் பொறுத்த தேவ் அவளிடம்..
ஹே! மொக்கை போடுற ..! உனக்கு தெரியுதா ? இல்லையா ? நம்மல பத்தி பேசு மா !
நம்மல பத்தி என்ன பேச சொல்ற ? நீ பேசு அப்போ..
இன்னைக்கு..! இன்னைக்கு...! அது நம்ம..
டக்குனு சொல்லு தேவ்..! கடுப்ப கெலப்புற..!
அது நம்ம பாத்த படம் சூப்பர்ல ?
கடுப்பான சஹானா அவனிடம்.. " டேய் நீயும் இப்போ மொக்கை தான் போடுற.." சரி நான் வெச்சுரவா..!
அதுக்குள்ள போனுமா ?
ஹ்ம்ம் டா ! நாளைக்கு ஸ்கூல் போகனும்.. ஹே! முக்கியமா சொல்லணும் நெனச்சேன்.. நான் கூப்பிட மாட்டேன் இனிமே..
ஹே ! என்ன திடீர்னு... மச்! அப்போ இன்னைக்கு ஆச்சு பேசிட்டு போ !
அப்ரம் பேசுவோம் டா ! இப்போ அம்மா வந்துருவாங்க தூங்க .. பை பை !
அடுத்த வாரம் முழுதும் வருத்தத்துடன் சுற்றிக் கொண்டிருந்தான் தேவ்..
2 மாதங்களுக்கு பிறகு..
அன்று தேவ்வும் சஹாவ்வும் சாட் செய்துக் கொண்டிருந்தார்கள்..
தேவ்..! என் ஃப்ரெண்ட் ஒருத்தி ஒரு 11 கேள்வி என்கிட்ட கேட்டா.. நமக்கு பிடிச்சவங்க கிட்ட கேட்கலாம் சொன்னா ! " உன்கிட்ட கேக்கவா ?"
கேளு டா !
சரி முதல் கேள்வி.. என்ன எப்டி கூப்டனும்னு ஆசை உனக்கு ?
ஹ்ம்ம்.. செல்லம்.., தங்கம்.., அம்மு.., ரொம்ப பிடிச்சது "பேபி" சரி நீ சொல்லு !?
"டார்லிங் ?? டியர் ??"
பெரிய இங்கிலீஷ் பரம்பரை.. டார்லிங் ஆஹ்ம்...
KAMU SEDANG MEMBACA
என் நெஞ்சின் தீயே..!
Romansa" நீ என்கூட இருந்தா வாழ்க்கைல தோத்து போய்டுவேன்னு பயமா இருக்கு.," உனக்கே தெரியும் ' யூ., என்றவனிடம் ' நிறுத்து ' என்பதை போல் சைகை செய்தாள் கண்ணீருடன்..!