மதியம் எழுந்தவள் தன் அறையில் இருக்க , குளித்து விட்டு வெளியில் வந்த பொழுது , சமையல் அறையில் சத்தம் கேட்டது.
"உன்னோடு வாழும் ஒவ்வொரு நாளும் இறகை போல பறக்கிறேன்.." என பாடிக்கொண்டே காய் நறுக்கி கொண்டிருந்தான் அவன்.
" நான் பாடட்டா மீதி பாட்ட ? " என கேட்டவாறு அங்கு வந்தாள் அவள்.
" நான் சமைகட்டான்னு கேட்டா இன்னும் பெட்டரா இருக்கும்." என்றான் அவன்.
" சரி தள்ளு நான் செய்யுறேன் , என்றவளை தடுத்தவன் , இல்ல இல்ல நான் செய்யுறேன் " என்றுவிட்டான்.
"அப்போ எனக்கு காஃபி குடு" என்றவள் ஸ்லாப் மேல் ஏறி அமர்ந்து கொண்டாள்.
கண்ட நேரத்துக்கு காஃபி குடிக்க கூடாது , " என்றவன் ஒரு கப் காபியை அவள் கையில் திணித்தான்.
காஃபியை குடித்து முடித்தவள் அவன் கன்னத்தில் ஒரு முத்தமிட்டு " லவ் யூ அகில் " என்றுவிட்டு இறங்கி செல்ல ,
"அதென்னடி புதுசா அகில் ? "
அட அது உன் பேருன்னு நீ சொன்னதுல இருந்து லட்சம் தடவ சொல்லி பாத்துட்டேன் , இப்போ கூப்ட்டா எப்படி இருக்குனு பார்த்தேன் , நாட் பேட் ! என்றவள் தன் அறைக்கு சென்றுவிட்டாள்.
1 மணி நேரம் கழித்து அவள் அறைக்கு சாப்பாடு அனைத்தையும் எடுத்து கொண்டு சென்றான்.அவள் எதோ எழுதி கொண்டிருந்தாள்.
"இப்போ என்ன எழுதுற ? 1 மாசத்துல காலேஜ்ஜே முடிஞ்சி்டும் உனக்கு" என்றபடி அவளுக்கு ஊட்ட ஆரம்பித்தான்.
நிறைய அசைன்மெண்ட் பெண்டிங் ! அதான் நாளைக்குள்ள முடிச்சுட்டா சப்மிட் பண்ணிடலாம் ! என்றவள் கிறுக்கி கொண்டிருந்தாள் அனைத்தையும்.
இரவு ஆகியும் அவள் வெளியில் வரவில்லை , எழுதி கொண்டே இருந்தாள் ,
YOU ARE READING
என் நெஞ்சின் தீயே..!
Romance" நீ என்கூட இருந்தா வாழ்க்கைல தோத்து போய்டுவேன்னு பயமா இருக்கு.," உனக்கே தெரியும் ' யூ., என்றவனிடம் ' நிறுத்து ' என்பதை போல் சைகை செய்தாள் கண்ணீருடன்..!