அவள் காலேஜ்ஜை முடித்து ஊருக்கு சென்று விட்டாள் , அவள் அங்கு சென்று 3 மாதம் முடிந்த நிலையில் அவள் அப்பா கம்பனியின் பாதி ஷேர்களை இவள் பெயருக்கு மாற்றி இருந்தார் . சென்னையில் உள்ள கம்பனிக்கு தான் பொறுப்பு ஏற்று கொள்வதாக அவள் சொல்ல , அவரும் மறுக்கவில்லை.
அன்று நான்கு மாதம் முடிந்திருக்கும் நிலையில் அவள் மீண்டும் அங்கு வர , அவளை பூட்டு போட்ட வீடு தான் வரவேற்றது. எரிச்சல் ஆனவள் தன்னிடம் இருக்கும் சாவியை போட்டு திறந்து தன் அறைக்கு சென்றுவிட்டாள்.
இரவு வீடு வந்தவனை பார்த்தவள் " நான் இல்லாம இளைச்சு போய்யிருப்ப ன்னு நினைச்சேன் ஆனா ஏற்கனவே பார்த்தது விட பெருசா இருக்க " என்றாள்.
" ஹீ ஹீ ! " என இளித்தவன் , " அதெல்லாம் அப்படி தான் நீ எப்டி இருக்க , எப்போ வந்த , உன் வீட்டில எல்லாம் எப்படி இருக்காங்க ? , எப்போ கம்பனி போய் ஜாயின் பண்ணனும் ?"
என வரிசையாய் கேள்விகளை அடுக்க ," இரு வெயிட் , நான் மதியம் வந்தேன் , வீட்டுல எல்லாம் சூப்பர் , நாளைக்கு கம்பனி போறேன்." என முடித்தாள்.
எத்தன மணிக்கு போவ ? நான் ட்ராப் பண்ணட்டா ? " என
" ஏழு மணிக்கு போவேன் நீ முழிச்சா பார்க்கலாம்." என்றவள் சாப்பாடு செய்து அவனுக்கு ஊட்டி விட்டு அவளும் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றாள்.
அடுத்த நாள் ஏழு மணிக்கு ரெடி ஆக இருந்தவனை பார்த்து ஆச்சரிய பட்டவள் " என்ன டா இவளோ சீக்கிரம் ?" என
நீ தான் போகனும்ன்னு சொன்ன நீ உன்னோட சொந்த கம்பனிக்கு MDயா போற அதுக்கு கூட நான் வராமலா ? "
"இன்னிக்கு அபிசியல் இல்ல தேவ் சும்மா விசிட் , எல்லாரும் எந்த
டைம்க்கு வராங்க , போறாங்க நிலவரம் பார்க்க போறேன் . " என்றாள் சனா." அடிப்பாவி , அதுக்கு போய் இப்படி ஒரு போலீஸ் ஆபீசர்ர கிளப்பி அதுவும் இவ்வளோ ஏர்லி மார்னிங் " என்றவன் அவளை அழைத்து கொண்டு கம்பனிக்கு சென்றான்.
YOU ARE READING
என் நெஞ்சின் தீயே..!
Romance" நீ என்கூட இருந்தா வாழ்க்கைல தோத்து போய்டுவேன்னு பயமா இருக்கு.," உனக்கே தெரியும் ' யூ., என்றவனிடம் ' நிறுத்து ' என்பதை போல் சைகை செய்தாள் கண்ணீருடன்..!