17 . சஹா..❤️

286 23 5
                                    

மனமெங்கும் மாய ஊஞ்சல் ,
உனதன்பில் ஆட ஆட..❤️

அவன் தன்னை வேண்டாம் என கூறிவிட்டு தன்னிடம் இதை கேட்க காரணம் என்ன என யோசித்தாள். அவன் கிரைம் பிராஞ்ச் அப்ளை செய்தது நினைவு வர , அவன் தான் நினைத்ததை முடித்துவிட்டு பின்பு அவளிடம் வர நினைதுள்ளான் என நினைத்தவள் , இன்னொரு தடவை கேட்டா முடிவா சொல்லிடலாம் என நினைத்து விட்டு தூங்கி போனாள்.

அங்கு அவனோ " தப்பு பண்ணிட்டேன் அவள அப்படி ஹர்ட் பண்ணி இருக்க கூடாது , அவள விட்டுட்டு வந்து இருக்க கூடாது , ஆனா என் பக்கமும் ஞாயம் இருக்கு , அவ இல்லாம நான் மட்டும் சந்தோஷமா இருந்தேனா ? எதோ ஒரு நன்மைக்குன்னு அவ நினைச்சு பார்க்கலையா ? நான் அவள அப்படி விட்டுருவெனா ? நம்பிக்கை இல்லையா என்மேல ? எப்படி வைப்பா ? நான் தான் அவளை விட்டுட்டு வந்தேன் ! என இப்படியும் அப்படியும் யோசித்தவன் அப்படியே உறங்கி போனான் விடியும் நேரத்தில்.

காலை எழுந்து வந்தவள் , அவனை பார்த்து எழுந்த உணர்ச்சியை கட்டுபடுத்தி , வேலையை முடித்துவிட்டு அவனை எழுப்ப , எழுந்து நேரம் பார்த்தவன் ஓடிவிட்டான் கிளம்புவதற்கு . இப்படியே இரண்டு மாதம் ஓட , அன்று விஷ்வாவும் சஹானாவின் தாயும் அவளை பார்க்க வருவதாய் கூறியிருந்தார்கள். அவள் கல்லூரி செல்லாமல் வீட்டில் இருந்தாள். அவனுக்கு சாப்பாடு செய்து எடுத்து வைத்தவள் , அவன் கிளம்பிய பிறகு டிவியை போட்டு அமர்ந்து கொண்டாள்.இப்போது வருவார்கள் அப்போது வருவார்கள் என பார்த்து பார்த்து சோர்ந்தவள் நேரம் பார்க்க அது மதியம் 3 என காட்டியது . எதோ நினைவில் இருந்தவள் அப்படியே கண் அயர கதவு தட்டும் சத்தம் கேட்டு திறக்க அங்கு அவள் அண்ணனும் தாயும் இருந்தார்கள் , முகத்தில் சந்தோஷம் இருந்தாலும் அதை மறைத்துகொண்டு . அவர்களை அனைத்து கொண்டவள் , உள்ளே அழைத்து செல்ல , தேவை இல்லாத ஒரு மௌனம் ஆட்கொண்டது மூவரையும். அவள் அண்ணனே பேச்சை ஆரம்பித்தான். அவர்கள் இவள் தான் பிரிந்து இருக்க ஆசைப்பட்டாள் என குற்றம் சாட்டினார்கள்.

என் நெஞ்சின் தீயே..! Donde viven las historias. Descúbrelo ahora