தீ என புரிந்தும் அடி நானே
திரும்பவும் உனை தொட வந்தேனே,
தெரிந்தே சுகமாய் எரிந்தேனே..❤️அதற்கு பிறகு வந்த நாட்களில் , சஹானா கொஞ்சமே கொஞ்சம் நிம்மதியாக உணர்ந்தாள்.எப்போதும் இல்லை என்றாலும் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை அவள் தாயிடம் பேசினாள் , மாதம் ஒரு முறை ஊருக்கு சென்றாள். படிப்பு இன்னும் ஆறே மாதம் இருக்க , தான் முடிக்க வேண்டிய அசைன்மெண்ட் எல்லாம் குவித்து வைத்து முடித்து கொண்டிருந்தாள் அந்த ஞாயிற்றுக்கிழமை. எங்கோ வெளியில் சென்று விட்டு வந்த தேவ் உள்ளே வந்தவன் தான் அவன் இரவு உணவு சாப்பிட கூட வரவில்லை.இவளும் எழுதும் மும்மரத்தில் கவனியாமல் இருந்துவிட்டாள்.வெகு நேரம் கழித்து எழுந்தவள் நேரத்தை பார்க்க அது இரவு 1 என காட்டியது , அவன் அறைக்கு சென்று விளக்கை போட அங்கு அவன் கட்டிலுக்கும் சுவரிற்கும் நடுவில் உள்ள இடத்தில் குறுகி அமர்ந்திருந்தான்.
தேவ் ! என இவள் அழைக்க அங்கு ஒரு சத்தமும் வரவில்லை , பயந்து பக்கத்தில் போய் பார்க்க , அவன் கண்கள் ரத்தமென சிவந்து இருந்தது, " டேய் என்ன ஆச்சு எதுக்கு இப்படி இருக்க என அவனை உலுக்க ! அவன் அப்படியே அவள் மடியில் சரிந்து கதற ஆரம்பித்தான்.
நான் ரொம்ப கஷ்ட பட்டேன் இதுக்காக ! எனக்கு புரொமோஷன் இல்லனா கூட பரவாயில்லை . என் உழைப்புக்கு மதிப்பு இல்லையா ? நீ சால்வ் பண்ணது எல்லாம் ஒரு கேஸ் ஏ இல்லன்னு ஃபைல் ஆ மூஞ்சில எரிஞ்சிட்டாரு dsp ! எனக்கு அப்படியே செத்துடலாம் போல இருந்துச்சு.எத்தன நாள் தூங்காம இருந்து இருக்கேன் தெரியுமா ? உன்ன எவ்ளோ கஷ்ட படுத்தி இருப்பேன் , அன்னைக்கு ஒரு நாள் குடிச்சுட்டு வந்தேன் ஞாபகம் இருக்கா ? அந்த கேஸ் ஆ நான் எவ்ளோ டீப் ஆ அனாலிசிஸ் பண்ணேன் தெரியுமா ? முடிக்கிற நேரம் dsp வேற ஒரு முக்கியமான கேஸ் ன்னு என்ன அந்த கேஸ் ல இருந்து விலக சொல்லிட்டாரு.அந்த கேஸ் மேல தான் நான் ரொம்ப நம்பிக்கை வெச்சு இருந்தேன்..எல்லாமே போய்டுச்சு ! என் உழைப்ப வீண் பண்ணது தான் என்னால தாங்க முடியல " என்றவாறு மேலும் எதேதோ கூறி கொண்டு இருந்தான்.சிறிது நேரம் அவனை விட்டவள் பின்பு , " போதும் தேவ் ! என்றுவிட்டு அங்கிருந்து எழுந்து செல்ல , " இன்னும் கொஞ்ச நேரம் இரேன் அம்மு பிளீஸ் " என்றான்
YOU ARE READING
என் நெஞ்சின் தீயே..!
Romance" நீ என்கூட இருந்தா வாழ்க்கைல தோத்து போய்டுவேன்னு பயமா இருக்கு.," உனக்கே தெரியும் ' யூ., என்றவனிடம் ' நிறுத்து ' என்பதை போல் சைகை செய்தாள் கண்ணீருடன்..!