27 . சஹா..❤️

340 18 12
                                    

ஒரே நேரத்தில் வயிற்றிலும் , கையிலும் குழந்தையை வைத்து கொண்டு சனா ரொம்பவும் தடுமாறி போனாள்.,அவள் கஷ்ட படும் நேரம் எல்லாம் அவனுக்கு கோவம் உச்சத்திற்கு சென்றாலும் , அவள் முகத்தை பார்த்த நிமிடம் அவள் துன்பத்தை போக்க நினைப்பான்.

அவளுக்கு வளைகாப்பு வைக்க நினைத்தவன் , ஆசை ஆசையாய் அனைவரையும் வரவேற்றான். இப்படி ஒரு விஷயம் நடக்க போவது தெரிந்த அடுத்த நிமிடம் , அவனிடம் சண்டை போட தொடங்கி விட்டாள்.

"நமக்கு கல்யாணம் எவ்வளோ சிம்பிளா நடந்ததுன்னு உனக்கு தெரியும் , இவளுக்கு பேர் கூட நம்ம அப்படி பிரைவேட் செரிமோனி மாதிரி தான் வெச்சோம் , ஏன் ஊரையே கூப்பிடுற , எனக்கு பிடிக்கல ! , இப்போ ஜ்வாலா யாருன்னு கேப்பாங்க எல்லாரும் என்ன சொல்லுவ ?!

அவளை எப்படியோ சமாதானம் செய்தவன் , அனைவரையும் கூப்பிட்டு விட , அவள் சொன்னது தான் நடந்தது.அனைவரும் ஜ்வாலா பற்றி கேட்க , ஒரு சிலர் சரியாக தத்து எடுத்த குழந்தை என கூறிவிட , சில பேர் சொல்ல கூடாத முறையெல்லாம் சொன்னார்கள்.
சனா , தேவ் யாரோ ஒருவர் தகாத உறவில் வந்த குழந்தையாக இருக்கும் என ஒரு அம்மா கூறிவிட அதை கேட்ட சனா தனக்கு வளைகாப்பு என மறந்து அழ ஆரம்பித்தாள்.

அப்போது தான் , வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தவன் அவள் அழுவதை பார்த்து விட்டான்.
அவளிடம் ஓடியவன் " என்ன ஆச்சு ? ஏன் டா அழற ? " என அவள் அருகில் மண்டியிட்டு கேட்க , அவனை தனியே அழைத்து சென்ற அவன் தாய் நடந்ததை கூற , அங்கு வந்தவன் , வீடே அதிரும் படி " இவ எங்க சொந்த குழந்தை , எங்களுக்கு கல்யாணம் ஆகி 3 வருஷம் முடிஞ்சு போச்சு ! முதல் குழந்தை பத்தி எங்களுக்கு பயம் இருந்ததுனால , நாங்க யாருக்கும் சொல்லல அவளோ தான் , கண்டதையும் பேசுற வேலை வேணாம் , நான் மனுஷனா இருக்க மாட்டேன் !.

அதற்கு பிறகு அந்த இடத்தில் ஒரு சின்ன சத்தம் கூட இல்லை ! அப்படி ஒரு அமைதியாக அணைத்து வேலைகளும் நடந்தது !

அனைவரும் வளையல் போட்டுவிட்டு செல்ல , அவள் அருகில் வந்தவன் ஒரு பிளாட்டினம் செயின் எடுத்து அவள் கழுத்தில் அனிவித்தான்.அவள் கையில் குழந்தையை கொடுத்தவன் அவள் அமர்ந்திருந்த சோஃபா விளிம்பில் அமர்ந்து ஒரு ஃபோட்டோ எடுக்க சொன்னான்.

என் நெஞ்சின் தீயே..! Where stories live. Discover now