அழகின் போதை! குணத்தை மறைக்க...
காதல் போதை! கண்ணை மறைக்க...
காம போதை! அகவை மறைக்க...
வேலை போதை! வீட்டை மறைக்க...
சோகபோதை! சிரிப்பை மறைக்க...
சென்றோர் போதை! இருப்போர் மறைக்க...
இறப்பின் போதை! வாழ்வை மறைக்க...
பயத்தின் போதை! நலத்தை மறைக்க...
போதை!!! என்றாம் பேதை உலகில்.
போதை போதை போதை தேடி!!!நிழலே என்று நித்தம் வாழ்ந்து!!!
நிஜத்தை மறந்து வீழும் வாழ்க்கை
வாழும் மனிதம்! பாரின் போதை.
Author notes: hi makkalae in view of international day against illicit drug trafficking on june 26.06 that is on my b day this is my b day creation. Elarum padichu pathu vote comnt thattitu pongi seeya soon🖤🖤🖤🖤🖤.
YOU ARE READING
சகோவின் சிந்தனை சிதறல்கள் (கவிதை)
PoetryTry panni parunga sago . Hope u will like it. ரசனை கவிதையின் வித்தாகும் ரசித்தல் கவியின் குணமாகும் ரசித்து பார்த்தால் எதுவும் கவியாகும் ரசித்து படித்தால் கவியும் கனியாகும் என் தாய் மொழியாம் தமிழ் மொழியில்: இந்த மேடையில் எனது முதல் நூல். நடுவில் சி...