தாய்

333 111 133
                                    

பலமற்ற(உடல் வலுவில்) பெண் பிறவியில் நீ பிறந்தாய்
பெருவலி பொறுத்து பாரில் என்னை பெற்றாய்
பள்ளி செல்லும் முன்பே கல்வியை நீ கொடுத்தாய்.
பகலிரவு பாராமல் பெருமையுடன் உழைத்தாய்.

அன்பும் அறிவும் அழகுடன் அளித்தாய்
அமதுணவை அன்பு கலந்து படைத்தாய்

துயரில் நானிருக்க கண்டால் அழுதாய்
மகிழ்வில் நானிருக்க கண்டால் சிரித்தாய்
நான் பிறந்த பொழுது மட்டும்
நானழுதிட நீ சிரித்தாய்.

அதிகாலை முதல் நள்ளிரவு வரை உழைத்தாய்
சிறு அகவையில் சிற்றறிவுடன் நானிருந்திட நீ ரசித்தாய்

படுத்திருந்த என்னை நீ எழுந்து நடக்க வைத்தாய்
அன்று முதல் இன்று வரை என்றும் என்னை விழுந்திடாமல் காத்தாய்
பரம்பொருள் தந்ததில் பெரும்பொருள் நீ தான் என் தாய்.

சகோவின் சிந்தனை சிதறல்கள் (கவிதை)Où les histoires vivent. Découvrez maintenant