*ஓடி விளையாடுவோம் பாப்பா!*

60 9 13
                                    

*ஓடி விளையாடுவோம் பாப்பா!*

காத்திருந்த காதல் கூடியே…
கண்மணி என்கருவில்நீ கருவாகினாய்.

உன்னைக் காக்க என்னை நானும் மாற்றி கொண்டேன்
உ(ன்)னக்காக என்னை நானே வருத்திக்கொண்டேன்

சின்ன மூக்கிது சின்னமாகுமோ அன்பினாலே
சின்ன விரலிது சின்னமாகுமோ அன்பினாலே
சின்ன கால்களும் சின்னமாகுமோ அன்பினாலே

ஆசைகள் அடுக்கியே
ஆனந்தம் பெருகியே…

நினைவில் சுமையாய்
கனவில் சுவையாய்
என்றும் என்னுடன் இருக்கின்றாய்

உயிருள் உயிராய்
உடலுள் உடலாய்
என்றும் என்னுடன் இருக்கின்றாய்

உன்னைப் பார்க்க பார்க்கத் தான்
காக்க காக்க நான் மகிழ்கின்றேன்

வார்த்தையால் சொல்லத்தான் முடியு(ம்)மோ எந்தன் ஆசையை

உன்னைப் பார்க்கத் தான் என்னையே மாய்க்கத்தான் சரியென்பேனே…

அந்தச் சின்ன கைகளும் என்னை கொஞ்சி மகிழுமோ?
அந்தச் சின்ன கால்களும் நிலத்தை தட்டி நடக்குமோ?
அந்தச் சின்ன கண்களும் இறுகிக் கத்தி விறைக்குமோ?
அந்தச் சின்ன வாயது என் மார்பில் சேர்ந்து அமுதமுறிஞ்சுமோ?

மாதமாதமாய் மருத்துவம் சென்றேன்
பரிசோதனைகள் யாவும் செய்து வந்தேன்

கண்கள் மூடி திறந்தேன்
மூன்று மாதம் கடந்தேன்

உடலில் குறை என்றனர்
உயிர் ஈரும் பயமென்றனர்
இறந்து போன மனம்
மௌனம் காக்க
மௌனம் சம்மதம் ஆகிக்
கொன்றேன் குழந்தையை

பிஞ்சு குழந்தை
பிண்டம் வடிவில்
நெஞ்சை உலுக்க
நகராமல் நகர்ந்தது பல நாட்கள்
தவழாமல் தவழ்ந்தது சில வருடங்கள்

மீண்டும் என்னவன் காதல் செய்ய
மீண்டும் காத்திருந்த காதல் கூடியே
மீண்டும் கண்மணி என் கருவில்நீ கருவாகினாய்

மாதமாதமாய் மருத்துவம் சென்றேன்
மாதம் ஏழரை கடந்து நின்றேன்

ஹாஹ்
ஏழரை…

வலித்தது…
உடல்…
உயிர்…
உள்ளம்…

காண துடிக்கின்றாயோ
கண்ணே இவ்வுலகை?

குறும்பென்ற குணம் - பொதுவாய்
இரசித்திடும் மனம்.

குறும்பாய் சொல் கேளாமல்
வந்தாய் வெளியே

வந்தாயே வந்தாய்
ஏன் வந்தாய் இப்படி?
வந்தாயே வந்தாய்
ஒரு மூச்சுடனே வந்திருந்தால்
பெரு மூச்சுடனே கண் மூடிருப்பேன்
கண்மணியே…

குழந்தை நாடி நாடியே குழந்தை ஆகினேன்
குறும்பாய் நிழல் கண்டு கண்டுதான் மூர்ச்சை ஆகினேன்

தனியே தவிக்கின்றாயோ சொர்க்கத்தில்?
செல்! பின்னாலே வந்து ஓடி பிடித்து விளையாடிடுவோம் அங்காவது!!

- சகோ  ச.பை முகமது சல்மான் (mad_sago)

சகோவின் சிந்தனை சிதறல்கள் (கவிதை)Donde viven las historias. Descúbrelo ahora