மாந்தனாய் பிறந்தது சாபமோ?
பேருரு ஆறறிவுடன் வாழ்வது சாபமோ?அதில்
பெண்ணாய் பிறந்து
பிறக்கும் முன்னே
புதைந்து மண்ணில்
மாய்வது சாபமோ?இல்லை
பிறந்து பின்னர்
வளர்ந்து வீட்டில்
அடங்கிக் கிடப்பது சாபமோ?இல்லை
வெளியில் வந்து
வீணோர் காதல்
வலையில் விழுந்து
வீணாய் பிறிந்து
வாழ்வது சாபமோ?இல்லை
மனமே இன்றி
மணமதை முடித்து
இல்லறம் தள்ளுதல் சாபமோ?இல்லை
பெண்ணாய் பிறந்த
பாவம் அதனால்
பாவிக்கிரையாதல் சாபமோ?மாந்தனாய் பிறந்தது சாபமோ?
பேருரு ஆறறிவுடன் வாழ்வது சாபமோ?அதில்
ஆணாய் பிறந்து
(ய்)ஆனையாய் உழைத்து
அழிவது சாபமோ?இல்லை
குடும்ப சுமையை
இரும்பு உடலால்
தழும்புகள் தாங்கி
சுமப்பது சாபமோ?இல்லை
அழகில் மயங்கி
காதலை நம்பி
காதலில் விழுந்து
கால் வழியில்
காணாமல் அவள் போக
கண்ணீர் விடுதல் சாபமோ?இல்லை
பட்டம் பெற்றதும்
புவியார் பல
பொறுப்பை தினிக்க
பணியின்றி
பணிதேடி
பல படி ஏறி
பல அடி வாங்கி
பணியில் அமர்வது சாபமோ?இல்லை
பணி பெற்று
மேலவனின் வசை பெற்று
வீடு வந்து
வீட்டவளின் வார்த்தை பெற்று
வெளியில் சிரித்து
வாழ்வது சாபமோ?மாந்தனாய் பிறந்தது சாபமோ?
பேருரு ஆறறிவுடன் வாழ்வது சாபமோ?
YOU ARE READING
சகோவின் சிந்தனை சிதறல்கள் (கவிதை)
PoetryTry panni parunga sago . Hope u will like it. ரசனை கவிதையின் வித்தாகும் ரசித்தல் கவியின் குணமாகும் ரசித்து பார்த்தால் எதுவும் கவியாகும் ரசித்து படித்தால் கவியும் கனியாகும் என் தாய் மொழியாம் தமிழ் மொழியில்: இந்த மேடையில் எனது முதல் நூல். நடுவில் சி...