போதையான பாதை

150 54 63
                                    

கல்லறை பத்திரிகை
கள்ளுக்கடை திறக்குதோ
வருமான வழியாக
விஸ்கீ தான் இருக்குதோ
பிள்ளைகள் பசியாற
பிராந்தீ தான் கிடைக்குமோ
பல்லுயிர் உயிர்வாழ
போதைதான் விளக்கமோ

ஏழைகள் தினம்வாட
குடியேதான் வெளிச்சமோ
குடிமக்கள் நலமாக
குடிதானே அமுதமோ

தத்தளிக்கும் பொருளாதாரம்
தூக்கிநிறுத்தும் திட்டமோ
வானுயர்ந்த நாட்டினிலே
வெக்கமிச்சமி ருக்குதோ
இந்தகால சூழலில்
பெரியநாற்றம் என்னவோ?

குமுறுகின்ற நெஞ்சம்
குமட்டுகின்ற குடியால்
குழம்பிப்போகி இருக்குதே

குழப்பமான் அரசினால்
கள்ளுக்கடை கூட்டமோ
அது கரோனாவின்
அன்பு அழைப்பு மடலோ?

தாங்கலயே நெஞ்சம்
தூங்கலயே தினமும்
என்னத்தான் இன்னும்
நடக்கத்தான் போகுமோ?



சகோவின் சிந்தனை சிதறல்கள் (கவிதை)Wo Geschichten leben. Entdecke jetzt