2

425 28 3
                                    

"ஆபத்தா?"

இப்பொழுது அமிழ்தாவின் முகத்திலும் தீவிரம் படர்ந்திருந்தது...

இருவரும் சிந்தனையுடன் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க,

மீண்டும் யாரோ அடிவயிற்றிலிருந்து அச்சத்தில் அலறுவது போல அந்தச் சத்தம் கேட்கவே,

இருவரது யோசனையும் இருந்த இடம் தெரியாமல் மறைந்தது...

அமிழ்தா அருளாளனின் முகம் பார்க்க, ஓர் நொடி... அவ்வளவு நேரம் கூட இல்லை... ஓர் நொடியின் ஒரு பகுதிக்கும் குறைவாக யோசித்தவன்,

"சரி... வா அமி... என்னன்னு பார்த்துரலாம்..." என்றபடி அவளது கையைப் பற்றினான்.

இருவரும் கண்ணை மூட, சடுதியில் அந்த அலறல் வந்த திசையில் இருந்தனர்.

அது...

ஏதோ ஒரு ஆளரவமற்ற கிளைச்சாலை...

வாகனங்கள் வந்து வருடக்கணக்காகி விட்டது என்பதை அங்கங்கே ஒட்டிக்கொண்டு மட்டும் இருந்த தாரைச் சுற்றிச் சுற்றி மண்டிக்கிடந்தபுதர் உணர்த்தியது.

"அமி... சத்தம் இங்க இருந்துதான வந்தது?" அருளாளன் சிறுசந்தேகத்துடன் கேட்டான்.

"ஆமாப்பா."

"ஆனா யாரையுமே காணோமே..."அருளாளன் சுற்றும்முற்றும் பார்த்தபடி சொன்னான்.

"ம்ம்... அதோட இந்த இடம் கொஞ்சம் விசித்திரமாவும் இருக்கு அருள்..." அமிழ்தாவும் கண்களைச் சுழற்றினாள்.

அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே வேறு ஏதோ ஒரு சத்தம் கேட்டது...

ஆளரவமற்ற இடமாக இருப்பினும் அரவத்தின் அரவம் இருக்கும் இடமாகத் தோன்ற, அருளாளன் கீழே குனிந்து பார்த்தான்.

அமிழ்தாவின் காலடியில் ஒரு நாகம் ஊர்ந்து செல்வதைப் பார்த்தவன், தன்னையறியாமல் அவளை வேகமாக இந்தப்புறம் பிடித்து இழுத்தான்.

அவன் இழுத்த வேகத்தில் என்னவென்று பார்த்துவிட்டு அவனை முறைத்தவள்,

"ஷப்பா... மிஸ்டர் கோஸ்ட்...நாம ரெண்டுபேரும் செத்து வருஷக்கணக்கா ஆச்சு..." என்றபடி அவனது தலையில் செல்லமாகத் தட்டினாள்.

விழி தாண்டும் வழிகள்(Completed)Where stories live. Discover now