3

352 22 8
                                    

அருளும் அவளும் எதிரெதிர்திசையில் செல்லத்தொடங்கி, வெகுதூரம் வந்துவிட்டது போல இருந்தது அமிழ்தாவிற்கு.. ஆனால் அவளது உள்ளுணர்வு சொல்லும் தூரம் வரை நடந்து கொண்டே இருந்தாள்...

வழியெங்கும் கவனமாக ஆராய்ந்தபடி வந்தவளுக்கு அங்கு யாரும் இல்லாதது சிறுசலிப்பை ஏற்படுத்தியது. ஆனால் இதற்கெல்லாம் சோர்ந்து போனால் அவள் அமிழ்தா அல்லவே...

அவள் மெல்ல நடந்துவந்து கொண்டிருக்க, அந்தக்குரல் அவளது காதில் கேட்டது... சட்டென நின்றாள்.

"உதவி...ஹெல்ப்... ஹெல்ப்... உதவி... உதவி.. ஹெல்ப்... உதவி..." என அந்தக் குரல் தமிழிலும் ஆங்கிலத்திலும் மாறிமாறி உதவி கேட்டுக்கொண்டிருந்தது.

'பதில் குரல் கொடுக்கலாமா? '.என நினைத்தவள்,

'வேண்டாம்... அருகிலேயே போய்ப்பார்த்துவிடலாம்...குரல் கொடுத்தால் முன்னால் போய் நிற்க வேண்டும்... எதற்கு? ' என்று எண்ணியவளாக குரல் எங்கிருந்து வருகிறது என அனுமானிக்க முயன்றாள்.

மெல்ல மெல்ல அந்த குரல் வந்த திசையைக் கணித்து நெருங்கிக்கொண்டே வந்தவள் சில நொடிகளுக்குப் பின் ஓரிடத்தில் நின்றாள்.

அந்த இடத்தில் தான் அந்தக்குரல் கேட்டது.

எங்கிருந்து வருகிறது என்பதைக் கண்டறிந்து, குரல் வந்த இடத்தைப் பார்த்தவள், லேசாகத் திகைத்தாள்.

ஒரு பெரிய பாறையின் அடியில் இருந்து அந்தக் குரல் வந்து கொண்டிருந்தது.

யாரோ பாறையின் அடியில் சிக்கிக்கொண்டார்கள் போல என்று நினைத்தவள், வேகமாக அந்தப்பாறையைச் சுற்றிவந்தாள்... எந்தநிலையில் சிக்கியிருக்கிறார்கள் என்று பார்த்து பக்குவமாகப் பாறையை நகர்த்த...

ஆனால் அந்தப்பாறை அந்தக்குரலைத் தவிர, எந்தத்தடயத்தையும் அவளுக்கு அளிக்கவில்லை.

எந்த மனிதரையும் அவளால் பாறைக்கு அடியில் பார்க்கஇயலவில்லை... ஒருவேளை மிகமோசமாகச் சிக்கிக்கொண்டார்கள் போல... என மனதுள் அந்த ஜீவனுக்காக வருந்தியபடி, மெல்ல அந்தப்பாறையை புரட்டினாள்...

விழி தாண்டும் வழிகள்(Completed)Where stories live. Discover now