29

288 21 0
                                    

தந்தை மீதிருந்த கோபத்தில் அந்தக் காட்டில் தன்னந்தனியே குறுக்கும்நெடுக்கும் நடந்துகொண்டிருந்த மாதிசனுக்குத் தன்மீதே கோபம் வந்தது. என்ன நடந்தும் கோபம் தணியாமல் இருக்க அங்கிருந்த பாறை ஒன்றில் அமர்ந்தான். அவனது மூளை தேவையில்லாத எதையோ தீவிரத்துடன் யோசித்துக் கொண்டிருப்பதை அவனது முகம் உணர்வுகளென்னும் திரை போட்டுப் படம்காட்டியது.

திடீரென ஏதோ காலடிச்சத்தம் கேட்க அவனது சிந்தை கலைந்தது. தான் அமர்ந்திருந்த இடமே மறைவாக ஆனால் வெளியே நடப்பது தெளிவாக தெரிவது போல இருக்க அதே இடத்தில் அசையாமல் அமர்ந்தான். அவன் செவிகள் பொய்க்கவில்லை என்பதை நிரூபிப்பது போல அந்தச்சத்தம் தொடர்ந்து அதிகமாக கேட்டது. யாரோ ஓடிவருவது போல... அருகே வரவர, காலடியில் இலைச்சருகுகள் நொறுங்கும் சத்தத்தோடு கொலுசொலியும் சிலம்பொலியும் இணைந்து கேட்டது.

யாராக இருக்கும் என்ற எண்ணத்துடன் கவனித்தவனின் பார்வையில் அரண்டுபோயிருந்த முகத்துடன் ஓடிவந்த சிறுமி ஒருத்திபட்டாள். அவளது முகம் களைப்பைக் காட்சிப்படுத்தியிருந்தது. வெகுதூரமும் நேரமும் ஓடிவந்திருப்பாள் போல. எங்கிருந்தோ தப்பித்துவிட்டோம் என்ற நிம்மதியும் தப்பித்துவிட்டோமோ? என்ற ஐயத்துடனான அச்சமும் அவளது உடல்மொழியில் கலந்து தெரிந்தது. நின்று மூச்சு வாங்கிமுடித்தவள் இன்னும் ஓடமுயன்று சிலஅடி எடுத்துவைத்தாள். ஆனால் சிலநொடிகளிலேயே தள்ளாடி கீழே விழுந்தாள்.

சில நிமிடங்கள் வரையிலும் இருந்த இடத்தில் இருந்து அசையாமல் மயங்கிக்கிடந்தவளை வெறித்துக்கொண்டிருந்தான் மாதிசன். பின் அலட்டாமல் எழுந்து அவளது அருகில் வந்தான். அவளைச் சோதித்தவனது கண்ணில் முதலில் பட்டது அவளது கையிலிருந்த பச்சைதான். அதனைக் கண்டவனின் கண்ணில் சுவாரசியம் கூடியது. இவளை அப்படியே தூக்கிச் சென்று தந்தையின் காலடியில் போட்டால் தந்தைக்குத் தன்மீதிருக்கும் கோபம் குறையக்கூடும். ஆனால் அது தந்தைமீது தனக்கிருக்கும் கோபத்தைக் குறைக்காதே... அதற்கு இவளை இங்கே கொன்று வீசிவிட்டுச் சென்றுவிடலாம் எனத் தன்னிடமிருந்த குறுவாளை எடுத்தவன் கீழே இருந்து கேட்ட சத்தத்தில் நிறுத்தினான்.

விழி தாண்டும் வழிகள்(Completed)Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin