15

244 22 7
                                    

“ம்க்கும்.. பேயெல்லாம் எஸ்டிடி படிச்சிருக்கும்ன்னு நான் என்னத்தைக் கண்டேன்?”

“என்னது?”

“ஒண்ணுமில்லங்கக்கா...”

அவனை ஒருமுறை முறைத்துவிட்டு அமிழ்தா அதில் கவனம் செலுத்தினாள். அவளது முகபாவம் அதைப்படிக்கப்படிக்க மாறிக்கொண்டே போக அதைக்கவனித்த அருளாளனின் முகபாவமும் தீவிரமானது. அவளாகவே சொல்வாள் என்பது அவனுக்குத் தெரியும். அவள் சொல்லும்வரை அமைதிகாத்தான். ஆனால் அவனளவு பொறுமை காக்க அங்கிருப்பவர்கள் இருவரும் அருளாளன் இல்லையே... மனோரதன் செய்யலாமா என்று எண்ணிய கணம் வினோதன் மவுனத்தை உடைத்தான்.

“யக்கா என்ன? 10 நிமிஷமா அதையே உத்து உத்துப் பார்த்துட்டு இருக்கீங்க? என்ன எழுதிருக்குன்னு சொல்லுக்கா...”

“ம்ம்.. இந்த இடத்துல ஆபத்து இருக்குன்னு போட்டுருக்கு...”

“இருக்காதா? இங்க செத்துக்கிடக்குற சிங்கத்தைப் பார்த்தாலே அள்ளு விடுது... இதுல இதுங்க அத்தனையும் உசிரோட நடமாடுறப்ப காதலர்கள் உட்கார்ந்து கொஞ்சிக்குலாவுற இடமாவா இருந்துருக்கும்?”

“நீங்க ரெண்டுபேரும் எனக்கு ஒரு உதவி பண்றீங்களா?”

“என்னதுக்கா? என்ன சொன்னாலும் செய்றோம்... பேசாம மட்டும் இருக்க சொல்லாதீங்க.. எங்களால முடியாது...”

“சேச்சே.. அவ்ளோ கஷ்டமான வேலைலாம் உங்கக்கிட்ட சொல்ல மாட்டேன்..ஜஸ்ட் இங்க மொத்தம் எத்தனை சிங்கத்தோட எலும்புக்கூடு இருக்குன்னு எண்ணிட்டு வர்றீங்களா?”

“சரி...ஆங்..ஆத்தி..எக்கா... உனக்குக் கொடுக்கறதுக்கு வேற டாஸ்க்கே கிடைக்கலயா? அதெல்லாம் பண்ண முடியாது... பார்த்தாலே பயமா இருக்கு...”

“ஹும்... சரியான பயந்தாங்கொள்ளிகளா இருந்துட்டு எதுக்கு இப்படி நட்டநடுராத்திரி பேய்க்கு ஹாய் சொல்ல வரணும்? வேப்பமரமேன்னு ரொமான்ஸ் பண்ணிட்டு இருந்த எங்களை இடைஞ்சல் பண்ணி உயிரை வாங்கணும்?”அமிழ்தா அவர்கள் காதில் கேட்க வேண்டுமென்றே முணுமுணுத்தாள்.

விழி தாண்டும் வழிகள்(Completed)Where stories live. Discover now