30

845 33 35
                                    

காத்திருந்த நேரத்தில் உதிரனுக்கும் வெயினிக்கும் படபடவென்று இருந்தது. அந்த ஆராவதி வேறு யாரோவாக இருக்குமோ என்ற உதிரன் வெயினியின் நப்பாசையை வீட்டுவாயிலில் வந்து நின்ற காவலர்களின் கையிலிருந்த உத்தரவு துடைத்து எறிந்தது. அவர்களைக் கையோடு அழைத்து வருவது இளவரசரின் ஆணை என்றிருக்க இதோ இங்கே வந்து அமர்ந்திருக்கின்றனர். அந்த அரண்மனையைப் பார்க்கையில் உதிரனின் மனதில் அவன் மறக்க நினைத்த நினைவுகள் வந்துபோயின. இறுகிப்போய் அமர்ந்திருந்தான் அவன்.

ஸ்ரீஸ்ரீஸ்ரீ என்று ஆரம்பித்து இளவரசன் வருவதற்கான கட்டியம் கேட்க ஆரம்பிக்க, இருவரும் எழுந்தனர். வந்துநின்ற மாதிசனை அவர்கள் பார்த்த பார்வையில் அவன் கூனிக்குறுகியிருக்க வேண்டும். ஆனால் அதை எதிர்கொண்டு நிமிர்வாகவே நின்றான் அவன். வரவேற்க வேறு செய்தான்.

“தேவி எங்கே?” உதிரனின் குரல் கிட்டத்தட்ட உறுமலாக வந்தது. இளவரசன் என்று தெரிந்தும் குரலை உயர்த்தும் அவனை அலட்சியமாகப் புருவம் உயர்த்திப் பர்ர்த்தவன் பின்தொடரச் சொல்லிவிட்டு முன்னால் நடந்தான். காவலர்களை அவன் தவிர்த்துவிட, இவர்கள் மூவர் மட்டுமே நடந்துகொண்டிருந்தனர். அரண்மனைக்குள்ளேயே ரகசிய சுரங்கம் போன்று இருந்த பகுதிக்கு அவன் அழைத்துச் செல்ல ஆராவதி அரண்மனையில் இல்லை என உதிரனுக்குத் தோன்றியது. மனதுள் பதற்றத்துடனேயே அவன் செல்ல சுரங்கத்தின் முடிவு வந்து நின்ற இடத்தைப் பார்த்த உதிரனுக்கு உடல் நடுங்கியது.

“பரவாயில்லையே... சிறுவயதில் இருந்த பாதாளச்சிறை நினைவிருக்குபோல.. நான் நீங்க மறந்துருப்பீங்கன்னு நினைச்சேன்...” என்று இகழ்வாகச் சொல்லிவிட்டு முன்னால் நடந்தான். சிறை என்றவுடன் வெயினிக்கும் மனம் பதறியது. இங்கே தேவியை ஏன் கொண்டுவரவேண்டும்? அவனை அப்போதே இழுத்து நான்கு அறை விட வேண்டும் என்பது போல வெயினிக்குத் தோன்றியது. ஆனால் சிறிதுசிறிதாக இடைவெளி விட்டு வழிநெடுக நின்ற காவலர்கள் கண்முன் அதைச் செய்ய முடியாது என்று தோன்ற அமைதி காத்தாள். கிட்டத்தட்ட ஒரு மலையையே குடைந்து குகையாக மாற்றப்பட்டிருந்த அந்தப் பாதாளச்சிறை நீண்டுகொண்டே சென்றது.

விழி தாண்டும் வழிகள்(Completed)Where stories live. Discover now