8

283 20 14
                                    

"எங்களுக்கு ஒரு பேய் வேணும்..."அவன் குரல் அலட்சியமாக ஒலிக்க, அமிழ்தா உட்பட அங்கே மூவரின் குரல் அதிர்ச்சியில் ஒலித்தது.

"ஆங்?"

"என்னது பேயா?" வினோதனுக்குக் குரல் நடுங்கியது.

"ஆமாம்"

"அது என்ன தக்காளி வெங்காயமா? பக்கத்துக் கடைல வாங்கிக்கொடுக்குறதுக்கு?"

"அப்படி வாங்க முடியாதுன்னுதான் உங்கள கட்த்திட்டு வந்தோம்..."

"அப்..அப்...அப்...அப்படினா எங்கள கொ...கொ...ன்னு பே...யா மாத்...தப் போறிங்...களா?"

"ஆமாம்.." அருள் நிதானமாக சொன்னதில் கேள்வி கேட்ட வினோதன் பயந்து நடுங்க அமிழ்தா அவனை மனதில் அதட்டினாள்.

'அருள்...இவனை பயமுறுத்தி விளையாட இதுவா நேரம்? முதல்ல இங்க இருந்து போறதுக்கான வழியைப் பார்க்கலாம்...வா...'

'பொறு அமி...' அவ்ளுக்குப் பதிலளித்துவிட்டு வினோதனிடம் தொடர்ந்தான்.

"நீங்க எங்களுக்கு எந்தப் பேயையும் பிடிச்சுக் கொடுக்கலனா நீங்கதான் பேயா மாறணும்..."

"அது என்ன கோழியாயா? பிடிச்சுக் கொடுக்க... பேய்ய்ய்ய் யா..." மனோரதன் எகிறினான்.

"அது கூட பேச்சுவார்த்தை நடத்தப் போறப்ப தெரியலயா அது பேய்ன்னு..."

"ஆ..." ஒரு நிமிடம் திகைத்து விழித்த மனோரதன் மெல்ல அருகில் வந்து அருளாளனுக்கு கீழே இருந்த படிக்கட்டில் அமர்ந்தான்.

"இங்க பாருங்கண்ணா... நீங்க நாங்க போட்ட வீடியோலாம் பார்த்துத் தப்பாப் புரிஞ்சுகிட்டு எங்களைக் கட்த்திட்டு வந்துருக்கீங்கன்னு நினைக்கிறேன்.. நாங்களே படிச்சுட்டு வேலை கிடைக்காம என்ன வேலை பார்க்குறதுன்னு தெரியாம ஒரு யூடியுப் சேனல் ஆரம்பிச்சோம்...அதுல கண்டெண்ட் கிடைக்காம சும்மா இப்படி பாழடைஞ்ச இட்த்துக்கெல்லாம் போய் பேய் இருக்கான்னு தேடுறோம்ன்னு வீடியோ எடுப்போமே தவிர நாங்க இது நாள் வரை பேயைக் கண்ணால பார்த்த்து கிடையாது.ஏன் வீடியோல கூட நான் பேயைப் பார்த்தேன்னுலாம் சொல்லிருக்க மாட்டேன்...இந்த இட்த்துல பேய் இருக்கலாம்ன்னுதான் சொல்லுவேன்..."

விழி தாண்டும் வழிகள்(Completed)Donde viven las historias. Descúbrelo ahora