5

308 20 6
                                    

அமி.. அமி... இருமுறை அழைத்தவன், பதிலேதும் வராமல் இருக்கவே அமிழ்தா.. என்றழைத்தான் அழுத்தி... மீண்டும் . அழைப்பில் லேசாக பதட்டம்... என்று சொல்ல முடியாது, கவனம் கூடியிருந்தது.

அமிழ்தா... அமிழ்தா... அவன் அழைத்துக் கொண்டிருக்க அதனைத் தொடர விடாமல் மனோரதனின் குரல் இடையிட்டது.

"அண்ணா... அண்ணா... இங்க வாங்கண்ணா" அவன் பரபரப்பாக அழைக்க அரைமனதாக என்றாலும் உடனே அருகே சென்றான்.

அங்கே உறைந்தும் உறையாமலும் கிடந்த திரவத்தை நோக்கி அவனது கை அதிர்ச்சியோடு நீண்டது.

"இர... இர... இரத்தம்ண்ணா..."  அவனது நாக்கு மேலண்ணத்தில் ஓட்டிக் கீழே இறங்கியது...

"எனக்குப் பயமா இருக்குண்ணா..."

அருளாளனிடம் ஒண்டி அவனது கையை இறுக்கமாகப் பற்றியபடியே கூறினான்.

அவனது கையை மெல்ல தட்டிக் கொடுத்து, "அது இரத்தமா என்னன்னே தெரியல...சிகப்பா எதைப் பார்த்தாலும் பயப்படலாமா ?" என்று ஆரம்பித்தவன், "ஆமா உங்கள எப்படி கூப்புடுவாங்க?" என்று  அவனிடம் கேட்டான்.

அந்த திரவத்தையே கண்கள் தெறிக்க, வெறித்துக் கொண்டிருந்தான் அவன்.

அவனது தோளைத் தட்டினான். அதற்கு அவன் அதிர்ந்து திரும்பினான்.

“என்னண்ணா?”

“ஏன் இப்படி? உங்க பேரென்னன்னு கேட்டேன்...”

“மனோ...”

"மனோகரன்?"

"ம்ஹீம் மனோரதன்..."

"பேர் நல்லாருக்கு..." அருளாளன் புன்னகைத்தான். எதிரிலிருப்பவனின் பயத்தை மட்டுப்படுத்தத் தான் பேச்சுக்கொடுத்துப் பார்த்தான். ஆனால் அவனது பயம் மட்டுப்படுவதாகத் தோன்றவில்லை. அவன் கண்கள் கலவரத்திலேயே இருப்பதை உணர்ந்தவன், அதைப் போக்க முனைந்தான்.

விழி தாண்டும் வழிகள்(Completed)Where stories live. Discover now