திடீரென தாங்கள் இருந்த தளம் கதவு போல உட்புறமாக இரண்டாக மடியத் தொடங்க, ஐவரும் திகைத்தனர். கீழே நீரின் பெரும்பரப்பு கண்ணில் தெரிந்தது.
கீழே சறுகி, தண்ணீரில் விழப்போன வினோதனை, சுதாரித்துவிட்ட அமிழ்தா பிடித்து, அங்கிருந்த சுவரில் நீட்டிக்கொண்டிருந்த கற்பலகை ஒன்றில் ஏற்றிவிட்டாள்.
“தெய்வமே... இங்க வந்ததுல இருந்து நீதான என்னைக் காப்பாத்திட்டு இருக்க.. எனக்கும் கயலுக்கும் பொண்ணு பிறந்தா உன்பேரை வைக்கிறேன்க்கா...”
“அதுக்கு நீ முதல்ல வெளில போகணும் ராசா...” தீ அதிகமாகும்போதே சுதாரித்து அருளாளனின் அருகில் வந்து அருளாளனைப் பிடித்திருந்த மனோரதன் அதைப் போலவே இந்தப் பக்கம் இருந்த கற்பலகை ஒன்றில் ஏறியிருந்தான். அங்கிருந்து குரல் கொடுத்தான்.
“அடேய்.. எல்லாம் உன்னாலதான்.. உள்ள கூட்டிட்டு வந்து விட்டதுமில்லாம...”
“தயவுசெஞ்சு ரெண்டுபேரும் கொஞ்சநேரம் சும்மா இருக்கீங்களா?” அமிழ்தாவும் அருளும் தங்களையறியாமல் இணைந்து கேட்டுவிட்டு ஒருவரையொருவர் முறைத்தனர்.
“ஹலோ.. மிஸ்டர் கோஸ்ட்.. நான் சொன்னதையே நீங்களும் ஏன் சொல்றீங்க?”
அமிழ்தா அங்கிருந்து அருளாளனை நோக்கிக் கேட்டாள்.
மிஸ்டர் கோஸ்ட் என்பதைக் கேட்கவும் அருளாளன் ஏதோ வித்தியாசமாக உணர்கிறானா என வினோதன் கூர்ந்தான். ஆனால் அருளோ சலனமே இல்லாமல் பதிலளித்துக் கொண்டிருந்தான்.
“நான் சொன்னதைதான் நீ சொன்ன வேதாளமே...”
“இன்னொரு தடவை என்னை வேதாளம்ன்னு சொன்னன்னா கொன்னுருவேன்டா...”
“என்னைதான் ஏற்கனவே யாரோ கொன்னுட்டாங்களே... அது யாருன்னு பார்க்கலாம்ன்னு நினைச்சா நீ வந்து தொத்துனதுமில்லாம கூட வேற மூணு பிசாசுங்கள அசிஸ்டன்ட்டா வச்சுருக்க... என்னால இதுக்குமேல உங்க மூஞ்சிகளைப் பார்த்துட்டு இருக்க முடியாது... எனக்கு வெளில போக வழி சொல்லு..”
YOU ARE READING
விழி தாண்டும் வழிகள்(Completed)
Mystery / Thrillerதேடும் விழிகளைத் தாண்டி வழிகள் நீண்டால்? அருள்🖤அமி (சுடுகாட்டில் தென்றல் வீசினால் பார்ட் -2)