10

290 18 15
                                    

கண்ணை இறுக மூடியிருந்த வினோதன் தனியாகப் பேசிக் கொண்டிருந்தான்.

“பே...ய்... வந்துரு..ச்சா...?”

“மனோ... ப..தில்... சொல்...லுடா...”

“டே...ய்...”

“யக்...கா... நீயாவது சொல்லுக்கா...”

“அண்ணே... அருளண்ணே...”

மூவரையும் அழைத்துவிட்டு மீண்டும் மனோரதனிடம் வந்தான்...

“மனோ...டேய் மனோ... பேசுடா.. பயமா இருக்குடா...”

சொல்லியபடி இறுகப் பற்றியிருந்த மனோரதனின் கையை இன்னும் இறுக்கமாகப் பற்ற முயன்றபோதுதான் தான் பற்றியிருப்பது அவனது கையை அல்ல... காற்றை என்பதை உணர்ந்து கலவரத்துடன் மெல்ல கண்விழித்தான். மற்ற மூவரும் எங்கே? சுற்றிப் படர்ந்திருந்த இருள் வேறு அவனை அநியாயத்திற்கு அச்சுறுத்தியது.

“மனோ...”

“மனோ...”

“எங்கடா இருக்க? வாடா.. எனக்குப் பயமா இருக்குடா...”

“யக்கா... எங்கக்கா இருக்க? பயமுறுத்தாதக்கா... முன்னாடி வாக்கா... நீ.. நீ.. பே...பே..ய்தான்னு எனக்...குத் தெ...தெரி...யும்க்கா...யக்கா...”

“அண்...ணா... நீங்க...ளும்தான்...ண்ணா... ப்...ளீஸ்ண்ணா... விட்ருங்கண்ணா... நாங்க அப்படியே ஓடிப்போயிறோம்ண்ணா...”

-----------------------------
யாரோ தள்ளியதைப் போல பின்னால் வந்து விழுந்த மனோரதன் சுற்றியிருந்த இடத்தைப் பார்த்தபடி மெல்ல எழுந்தான். முன்னால் இருந்த இடத்தில் இருந்ததைப் போல இங்கும் இருள்தான் விரவியிருந்தது.

வெளிச்சத்திற்கு என்று தேடப்போனவனுக்கு முதல் தடவை கையைப் பற்றும்போதே அமிழ்தா எல்லாத்தையும் எடுத்துப் பையில் போட்டு பையை முதுகில் மாட்டச்சொன்னது நினைவுக்கு வந்து பின்னால் தடவினான். அவனது முதுகில் தான் பை இருந்தது. அதிலிருந்த டார்ச் லைட்டைத் தட்டுதடவி எடுத்து வெளிச்சத்தைப் பரப்பினான்.
அதே போல கற்சுவர்கள்தான் இங்கும் இருந்தது. ஆனால் இந்த இடத்தைவிட அந்த இடம் குறுகலாக இருக்க, யோசித்தபடியே மெல்ல நடக்கத் தொடங்கினான்.

விழி தாண்டும் வழிகள்(Completed)Where stories live. Discover now