மிகுந்த கடினத்துடன் முயற்சித்துக் கொண்டிருந்தாள். ம்ஹீம்.. எவ்வளவு எவ்வினாலும் தவ்வினாலும் அவளால் அதை எடுக்க முடியவில்லை. ஒருமுறை வெளிப்புறத்தை எட்டிப்பார்த்துவிட்டு யோசித்தவளை அங்கே கிடந்த பித்தளை அண்டா ஈர்த்தது. அதனைக் கவிழ்த்தி, அதன் மேல் ஏறினால் எடுத்துவிடலாம். சத்தம் வராமல் அந்த அண்டாவை உருட்டிக் கவிழ்த்தி ஏறப்போனவளின் கையைப் பிடித்துத் தடுத்தான் உதிரன்.
“அண்ணா...” அவளின் முகத்தில் அசடு அண்டாக்கொள்ளளவில் வழிந்தது.
“அதன் மேல் ஏறி ஏதாவது ஆகிருச்சுன்னா என்னம்மா ஆகறது?” சிறுபுன்னகையுடன் கேட்டவனைப் பார்த்துப் பதிலுக்குப் புன்னகைத்தாள்.
“அதெல்லாம் எனக்கு ஒண்ணும் ஆகாதுண்ணா...”
“அது எனக்கும் தெரியும்மா.. நான் பாத்திரத்துக்குச் சொன்னேன்... அப்பறம் உன் அண்ணிக்கு யார் பதில் சொல்றது?”
அவன் சிரிக்காமல் கிண்டலடித்ததில் முறைத்தாள் அவள்.அவள் முறைக்கும்போதே அவன் இவ்வளவு பிரமப்பிரயத்தனப்பட்டு அவள் எடுக்க முயற்சி செய்து கொண்டிருந்த ஜாடியை எடுத்து அவளிடம் நீட்டினான்.
கண்கள் மின்ன அதை வாங்கியவள், அந்த அண்டாவின் மீதே அமர்ந்து அந்த ஜாடியைத் திறந்தாள். அதனுள் மிதந்து கொண்டிருந்த தேன்நெல்லிகள் அவளை ஆவலுடன் அழைக்க, ஆசையாய் ஒன்றை எடுத்து வாயில் போட்டாள்.
“என்கிட்ட வந்து கேட்டா நான் எடுத்துத் தரமாட்டேனா தேவி?” என்றவனின் வாயிலும் ஒன்றைத் திணித்தாள் அவள்.
“நீங்கள் அண்ணியோடு இருந்தீங்கண்ணா...”
“உன் அண்ணி இதைச் செய்றதே உனக்காகத் தான்... அப்பறம் ஏன் இந்தக் கள்ளத்தனம்?” என்று கேட்டவனின் முகத்தில் புன்னகை இருந்தது.
“எனக்காகப் பார்த்துப் பார்த்துச் செய்வாங்க.. ஆனால் முழுசா ஊறமுன்னாடி எடுக்க விடமாட்டாங்கண்ணா...”
சொன்னபடி இன்னும் இரண்டு நெல்லிகளை எடுத்து ருசித்தவள், வெளியே ஏதோ அரவம் கேட்கவும் சட்டென எழுந்தாள்.
YOU ARE READING
விழி தாண்டும் வழிகள்(Completed)
Mystery / Thrillerதேடும் விழிகளைத் தாண்டி வழிகள் நீண்டால்? அருள்🖤அமி (சுடுகாட்டில் தென்றல் வீசினால் பார்ட் -2)