16

273 21 7
                                    

ஏதோ சொல்லியபடியே வந்த அமிழ்தா அவன் பின்னால் பின்னால் திரும்பிப்பார்த்தபடியே வந்ததைப் பார்த்து அவனது கையைப் பற்றித் திருப்பினாள்.

“என்ன அருள்? ஏன் ஒருமாதிரி இருக்கீங்க?”

“ஒண்ணுமில்ல.. அமி.. அப்பறம் சொல்றேன்...” என்றபடி தான் அவர்களுக்கு முன்னால் நடக்கத்தொடங்கினான். அவனிடம் எதுவும் கேட்காமல் அமிழ்தா மெல்ல நடக்கத்தொடங்கினாள்.

வெளியே எரியத்தொடங்கிய விளக்குகள் உள்ளேயும் எரியத்தொடங்கியிருக்க, மனோரதனும் வினோதனும் அந்த இடத்தை வேடிக்கைப் பார்த்துக்கொண்டே நடந்தனர். பெரிய அரங்கம் போல அந்த இடம் நீண்டுகொண்டே செல்ல, சிறிது தூரத்திற்குப்பின்னர் இருபுறமும் சிறுசிறு அறைகளையும் தன்னை அடக்கிக்கொண்டும் நீண்டது.

“அக்கா.. என்னக்கா இந்த இடம் இப்படி இருக்கு?”

“ஜெயில் அப்படிதான இருக்கும்..”

“ஜெயிலா?”

“அப்பறம் நான் அப்ப என்ன சொன்னேன்?”

“இது ஜெயில்ன்னு எதை வச்சு சொல்றீங்க?”

“இதை வச்சுச் சொல்றேன்...” கையில் வைத்திருந்த கல்வெட்டுப்படியைக் காட்டினாள்.

“அதுல அப்படி என்ன இருக்கு?”

“இந்த இடம் ஜெயில்ன்னு இருக்கு...”

“யக்கா...”

“ஆமாம்.. இச்சிறைக்காக ஐயேழு அரிகள் அதாவது 35 சிங்கங்கள் கலிங்கத்தைத் தாண்டிய காட்டுப்பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்டனன்னு இருக்கு...”

“இவ்ளோதான் இருக்கா அமி?”

“ஆமாம்...ஒண்ணு அந்தச் சிங்கங்களைக் கொண்டு வந்ததுக்கு.. இன்னொன்னு அந்தச் சிங்கங்களால ஒருத்தன் செத்ததுக்கு... மொத்தம் 2...”

“அதிலிருந்து வேற எதுவும் தெரியலயா? இது யார் ஏற்படுத்தினது? எதுக்கு ஏற்படுத்துனாங்க... அந்த மாதிரி?”

“ம்ஹ{ம்... அப்படி எதுவும் இல்ல...”

“இல்ல.. எழுத்துகளோட அமைப்பை வச்சே கொஞ்சம் ஊகிக்கலாம்தான? இது இவங்க காலம்ன்னு...”

விழி தாண்டும் வழிகள்(Completed)Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ