4

345 22 7
                                    

முதுகில் மாட்டிய டிரக்கிங் பேக்கோடு,  ஒருகையில் அந்த இருளில் ஒளிக்கு ஒரு சிறுபாதை ஏற்படுத்திக்கொண்டிருந்த டார்ச்லைட் சகிதம் மயங்கிக்கிடந்தவனை அருள் பார்த்தான்.

முகத்தில் அதீதக் களைப்பு தெரிந்தது. அவனது அருகில் சென்றவன், ஒருகணம் யோசித்துவிட்டு  உலுக்கி எழுப்பினான்.

ம்ஹீம்... அவனிடம் அசைவேதும் இல்லை. சுற்றும்முற்றும் பார்த்தவனின் பார்வை வட்டத்தில் அவன் மாட்டியிருந்த பையும்  அதில் பக்கவாட்டில் சொருகப்பட்டிருந்த தண்ணீர் பாட்டிலும் படவே , அதனை எடுத்துச் சிறிது தண்ணீரை அவனது முகத்தில் சிலீர் சிலீரென அடித்தான்.

தண்ணீர் பட...பட... மயங்கிக்கிடந்தவனது கருவிழிகள் லேசாக உருளத் தொடங்குவது அவனது மூடிய இமைகளின் அசைவில் தெரிந்தது. அவனுக்கு விழிப்புத்தட்டுவதைப் பார்த்து அருளாளனுக்கு நிம்மதி பரவியது. லேசாக அவனது கன்னத்தில் தட்டினான்.

மெல்ல கண்களைத் திறந்தவன்,  மலங்க மலங்க முழித்தான். விழுந்து கிடந்த டார்ச் வெளிச்சம் சுற்றியிருந்த இடத்தின் இருளைக்  காட்டவே, தன்னிலைக்கு வந்தவனாக, இருக்குமிடம் புரிந்தவனாக எழமுயன்றான்.

கையை ஊன்றி, எழ முயற்சிக்க ஏற்கனவே வண்டியிலிருந்த கீழே விழுந்ததில் பதம்பார்க்கப்பட்டிருந்த கை வலியைத் தூண்டியது.

ஆ.. என்று அவன் முனகியவனைக் கைத்தாங்கலாகத் தாங்கி எழுப்பி அமரவைத்தான் அருளாளன்.

எழுந்தமர்ந்தவனோ அப்படியே அருளாளன் மேல் வாகாக சாய்ந்தான். சாய்ந்தவனை ஒன்றும் சொல்லாமல் அருளாளன் தன் கையில் வைத்திருந்த தண்ணீரைக் குடிக்க வைத்தான்.

குடித்து முடித்து விட்டு, அப்படியே இன்னும் நன்றாக அருளாளனின் தோளில் சாய்ந்து அவனது கையை இறுக்கமாகப் பற்றினான்.

“வினோ... ஸாரிடா.. நீ சொல்லசொல்ல கேட்காம உன்னை இங்கக் கூட்டிட்டு வந்தேன்... என்தப்புதான்.. நீ சொன்னமாதிரியே இங்கேயிருந்து போயிரலாம்.. வாடா..."

விழி தாண்டும் வழிகள்(Completed)Where stories live. Discover now