9

276 22 16
                                    

அருளாளன் நெற்றியில் ஆள்காட்டி விரலை வைத்து அழுத்திக் கொண்டிருந்தான்.

“இந்த மாய்க்கானுங்க எதுக்கு இப்ப கையை இழுத்தானுங்க...”

“அதை அவனுங்க கிட்டயே கேட்போம் அமி...வா...”

மீண்டும் இருவரும் கைகளைப் பற்றிக் கண்களை மூடினர்.

ஆனால்...

அவர்கள்  கண்ணைத் திறந்த இடம் வேறொரு வெட்டவெளியாக இருந்தது...

 “மறுபடியும் முதல்ல இருந்தா?” அமிழ்தாவின் குரல் எரிச்சலாக ஒலித்தது.

****************************************************************

“டேய்... அவங்க எங்கடா?”

தங்கள் முன்னால் இருந்த வெற்றிடத்தைப் பார்த்த வினோதன் மனோரதன் பின்னால் ஒண்டியபடி கேட்டான்.

“ஆஅங்க்... நான்தான பாஸ்போர்ட்டும் விசாவும் வாங்கிக்கொடுத்து பிளைட் ஏத்தி விட்டுருக்கேன்...லேன்ட் ஆனதும் என்னைக் கூப்பிட்டுத் தகவல் சொல்லுவாங்க...வெயிட் பண்ணு...”

“மனோ...என்னடா?”

“அப்பறம் என்ன? நானும் உங்கூடதானடா இருக்கேன்...என்கிட்ட மட்டும் என்ன சொல்லிட்டா போச்சுங்க?”

“எப்படிடா திடீர்ன்னு மாயமா மறைஞ்சாய்ங்க ரெண்டு பேரும்?”

“அதான் தெரியலன்னு சொல்றேன்ல...”

“இல்லடா...ஒரு வேளை..”

“ஒரு வேளை?”

“அதுங்க ரெண்டும் ஒரிஜினல் பேய்களா இருக்குமோ?”

வினோதன் கேட்க மனோரதனிடமும் சிறு மவுனம்... பின் மெதுவாக அதைக் கலைத்தான்..

“சேச்சே...இருக்காதுடா...”

“எப்படி சொல்ற?”

“பேயா இருந்தா அதுங்க எதுங்க நம்மகிட்ட பேய் கேட்கணும்...”

“ஆங்..ஏதாவது அசிட்டன்ட் வொர்க்குக்குக் கேட்டுருக்கலாம்ல?”

 “அசிட்டன்ட் வொர்க்கா? ஏன்டா பேய்ங்க என்ன படமா எடுக்கப் போகுதுங்க...அசிட்டன்ட் டைரக்டர் தேட...?அதோட அதுங்க ரெண்டு மூஞ்சியையும் பார்த்தா பேய் மாதிரியா இருக்கு?”

விழி தாண்டும் வழிகள்(Completed)Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ