மனோரதன் மூக்கிலும் காதிலும் இரத்தம் வழிய கிடப்பதைப் பார்த்த அருளாளன் திகைத்து மீண்டான். ஏன் என்பதை அறிய முயன்றவனுக்கு அந்த இடம் முழுவதும் இருந்த காற்று நச்சாகத் தெரிய, சட்டென ம்னோரதனைக் கைகளில் அள்ளியவன் தாங்கள் வந்த திசையில் நடக்கத் தொடங்கினான். செல்லும்போதே கண்னைமூடி நச்சுக்காற்று இல்லாத இட்த்திற்குச் செல்லவேண்டும் என அவன் நினைக்க, எப்போதும் நடப்பதுபோல அவன் அந்த இட்த்திற்குச் செல்லவில்லை. அங்கேயே தான் இருந்தான். தனது சக்தி வேலை செய்யவில்லையா? ஏன்? அதிர்ந்தவன் யோசித்தாலும் நேரத்தை வீணாக்க விரும்பாதவனாக வேகமாக நடந்துகொண்டு தான் இருந்தான்.அமிழ்தாவை உதவிக்கு அழைக்கலாம் என்று எண்ணியவனாக அவளை மனதில் அழைத்தான்...
அமி...அமி... ஆனால் அவளிடம் இருந்தும் மறுமொழி வராமல் போக அதிர்ந்தவனாக நடையில் வேகத்தைக் கூட்டினான்.
எவ்வளவு தூரம் சென்றாலும் நச்சுக்காற்று அங்கும் வியாபித்திருந்த்து. இதை எப்படி பார்க்காமல் விட்டோம் என நொந்தவனாக அவனைக் கையில் சுமந்தபடி சென்றுகொண்டிருந்தான். பாதை வேறு போகப் போக குறுகுவது போல இருந்த்து. இவ்வளவு நேரம் அவன் இலகுவாக த் தூக்கி வந்த மனோரதனின் கால் அந்தக் குகையின் சுவரில் உரசத்தொடங்கியது. இரு கைகளில் ஏந்தியிருந்தவனைத் தோளுக்கு மாற்றியவனாக நடக்கத் தொடங்கினான். இப்பொழுது குகையின் உயரமும் குறைந்து கொண்டே வருவது போல தெரிந்த்து. ஒரு கட்ட்த்திற்கு மேல் அவனது உடல் குகைச் சுவரில் உரசாமல் கொண்டு செல்லஇயலவில்லை. பெருமளவு முயற்சி செய்தவன் உடல் காயத்தை விட உயிரைக் காப்பாற்றுவது முக்கியம் என பட உரசினாலும் வேகமாகச் செல்லத்தொடங்கினான்.
ஓரிட்த்தில் தட்டென்ற சத்தமும் அதைத் தொடர்ந்து கலங்கென்ற சத்தமும் கேட்க நின்ற அருளாளன் மனோரதனை இறக்கினான். அவனது கால் தான் இடித்திருந்த்து. ஆனால் நல்ல வேளையாக ஷூ அணிந்திருந்த்தால் காலில் காயம் எதுவும் ஏற்படவில்லை. அதை உறுதிப்படுத்தியவன் மீண்டும் மனோரதனைத் தூக்க மீண்டும் அவனினின் கால் அந்த குகையின் சுவரில் இடித்துத் தட்டியது. அவர்கள் இப்போது இருந்த இடம் வரையிலும் நச்சுக்காற்றாகத் தான் இருந்த்து. ஒவ்வொரு வினாடியின் ஒவ்வொரு பகுதியும் மனோரதன் உயிர்வாழ்வதற்கான நேரத்தைத் தீர்மானிப்பவை என்பதை உணர்ந்திருந்த அருள் அந்தச் சுவரைப் பார்த்தான். நீளமான சிறு கல்லொன்று வெளியே துருத்திக்கொண்டிருந்த்து. அதில்தான் இவன் மீண்டும் மீண்டும் இடித்துக்கொண்டிருந்தான். அந்தக் கல்லை அகற்றி விட்டால் சென்று விடலாம் என நினைத்தவனாக அந்தக் கல்லை உடைக்க அதனை மேலிருந்து கீழாகத் தட்டினான். அப்போதுதான் அது நிகழ்ந்த்து. அந்தக்கல் துண்டாக உடைந்து விழுவதற்குப் பதிலாக நெம்புகோல் போல கீழே சாய்ந்துகொடுத்தது. அருள் வியப்படைந்தவனாக மீண்டும் அந்தக்கல்லைப் பிடித்து இழுக்க அந்தச்சிறுகல் மட்டும் வெளியே வருவதற்குப் பதிலாக அந்த சுவரின் ஒரு பகுதியே அதனோடு இணைந்து பெயர்ந்து வந்தது. கதவாக திறந்து நின்ற அந்த அமைப்பைக் கண்ணில் சிறு வியப்புடன் பார்த்தான் அருளாளன்.
YOU ARE READING
விழி தாண்டும் வழிகள்(Completed)
Mystery / Thrillerதேடும் விழிகளைத் தாண்டி வழிகள் நீண்டால்? அருள்🖤அமி (சுடுகாட்டில் தென்றல் வீசினால் பார்ட் -2)