இரண்டு மூன்று ஈட்டிகள் சரக் சரக் கென எதிர்ப்புறம் பாயும் சத்தம் கேட்டவன் இன்னும் சில நொடிகளில் தன்னுடைய இரத்தம் பீறிடும் ஓசையை எதிர்ப்பார்த்தவனாகக் கண்களை இறுக மூடிக் காத்திருந்தான்.
ஒன்று...
இரண்டு..
மூன்று...
ஒவ்வொரு வினாடிக்கும் அவனது இதயம் பலமுறை துடிக்க, அது அவனது காதுகளில் பேரோசையாக ஒலிக்க, பாயும் ஈட்டிகளை எண்ணிக்கொண்டே இருந்தவன் அடுத்து எண்ணுவதற்கு சத்தம் வராமல் இருக்க, அதற்குக் காத்திருந்தவனுக்கு அவனது இதயத்துடிப்பு அவனுக்கு அந்தக் கற்பாதையில் பட்டு எதிரொலிப்பது போல தோன்றத் தொடங்கியது.
சில நொடிகள்... சில நொடிகள்தான்... மரணஓலைக்குக் காத்திருப்பவன் போல அணிந்திருந்த ஜெர்கினை இறுக்கமாகப் பற்றியபடியே தரையில் முகம் பதித்திருந்தான். அவனது உதடுகள் நடுங்கின. கண்களிலிருந்து ஈரம் கசியத் தொடங்கியது.
ஈட்டி பாயும் சத்தம் மேலும் கேட்காமல் இருக்க...
ம்ஹீம் என்று ஒரு செருமல் கேட்டது.
மெல்ல அப்படியே படுத்தபடியே கண்களைத் திறந்து பார்த்தான். அவள்தான்.
எழுந்திருக்குமாறு சைகை காட்டினாள். அசையாமல் எழுவது எப்படி என்று கற்றுக்கொண்டவனாக மெல்ல எழுந்தான் அவன்.
அசைவதற்கும் வழியில்லை. இவன் இந்தப்புற ஓரத்தில் அமர்ந்திருந்தான். அவள் அந்தப் புற ஓரத்தில் இருந்தாள். இருவருக்கும் இடையே இடைவெளி இருந்தது. ஆனால் இருவரின் இருபுறமும் இல்லை. அவன் தனக்கு அருகில் சுவரிடம் நலம்விசாரித்தபடி நின்ற ஈட்டியைப் பார்த்தான். ஒரு பயத்தோடுதான்.
அப்படியே சுழன்று கொண்டிருந்த அந்தக் கல்லைப் பார்க்க அதன் சுழற்சி நின்றிருந்தது.
இப்பொழுது மீண்டும் அவளது முகத்தைப் பார்க்க அவள் அவனைதான் பார்த்துக்கொண்டிருந்தாள்.
"அ...க்கா..."
"என்ன?"
"இனி... ஈ...ட்டி... வரா...தா?" இன்னமும் பயம் நீங்காதவனாகக் கேட்டான்.
YOU ARE READING
விழி தாண்டும் வழிகள்(Completed)
Mystery / Thrillerதேடும் விழிகளைத் தாண்டி வழிகள் நீண்டால்? அருள்🖤அமி (சுடுகாட்டில் தென்றல் வீசினால் பார்ட் -2)