“நடக்கக் கஷ்டமா இருக்கா? அப்ப நடக்கக்கூடாதுன்னு போட்டுருக்காங்கங்களா?”
“இல்ல மனோ.. ஓடக்கூடாதுன்னு போட்டிருக்காங்க” என்று நிதானமாகச்சொன்ன அருளாளன் வினோதனின் கையையும் மனோரதனின் கையையும் இறுகப்பற்றிய நொடிஇ நடந்துகொண்டிருந்த அமிழ்தாவின் காலை எதுவோ தட்டிவிட்டது. கீழே விழுந்தவள் என்னவென்று பார்க்கும்முன் ஏதோ சத்தம் கேட்க நால்வரும் நிமிர்ந்து பார்த்தனர். இவர்கள் வந்தவழி வெகுவேகமாக அடைபட்டது. அது அடைபட்டு முடித்த கணம், இருபுறமும் சுவராக நின்ற பெருங்கற்கள் மெதுவாகத் திறந்தன...
அது திறந்து முடித்த கணம் அமிழ்தாவின் பின்புறம் இருந்த சுவரில் பகுதிபகுதியாக மேல சென்றன. அதாவது இப்பொழுது அந்தச் சுவர் இருந்த இடத்தில் கல்லாலான கம்பிகள் மட்டுமே இருந்தன. பார்ப்பதற்குச் சிறைக்கம்பிகள் போல் இருந்தன.
அமிழ்தாவின் கால் எதிலோ பலமாகச்சிக்கியிருக்க, அதைவிடுவிக்க முயன்றாள் அவள். ஆனால் அது கடினமாக இருப்பது போல இருந்தது.“என்ன அமி?”
“கால்ல ஏதோ சங்கிலி மாதிரி இருக்கு அருள்..”
“சங்கிலி மாதிரியா?”
“ம்ம்.. மெல்லிசான ஆனா உறுதியான கல் சங்கிலி மாதிரி இருக்கு...” அதை விடுவிக்க முயன்றபடியே சொன்னாள்.
“வரவாடா?”
“இல்ல அருள்.. நானே வந்துர்றேன்” என்றவள்இ அருவமாக மாறிக் காலை எடுத்தாள்.
“அண்ணா.. அக்காவை எங்க காணோம்?”
“இங்கதான் இருக்கேன்...”
வினோதனுக்குப் பின்னாலிருந்து குரல் கேட்டதில் அவன் நிஜமாகவே பயந்துவிட்டான். நின்று கொண்டிருந்தவளைஇ நெஞ்சில் கைவைத்தபடி ஒருகணம் மேலும் கீழும் பார்த்தான்.
“யக்கா... ஏன்க்கா இப்படி பயமுறுத்துற?”
“பயமுறுத்துனனா? தேடுனியேன்னு பக்கத்துல வந்தேன்...இது ஒரு குத்தமா? அருள்.. வா...”
“எங்க?”
“அதான் என்னமோ சைங்...சைங்ன்னு திறந்துச்சே... வழி இருக்கான்னு பார்ப்போம் வா...”
YOU ARE READING
விழி தாண்டும் வழிகள்(Completed)
Mystery / Thrillerதேடும் விழிகளைத் தாண்டி வழிகள் நீண்டால்? அருள்🖤அமி (சுடுகாட்டில் தென்றல் வீசினால் பார்ட் -2)