12

279 18 13
                                    

டங்..டங்...டங்.. என்ற சத்தத்துடன் நாலாபுறமும் எதிரெதிராக மோதிய கற்களைப் பார்த்து அருளாளனும் அமிழ்தாவும் திகைத்தனர் என்றால் மனோரதனுக்கும் வினோதனுக்கும் வந்தஉயிர் மீண்டும்போவது போல இருந்தது.

"இந்தக் கல்லெல்லாம் எங்க இருந்து வந்து மிஸ்டர் கோஸ்ட் இப்படி ஊசலாடுது..."

"அதை அப்பறம் பார்க்கலாம் அமி... முதல்ல அங்க ரெண்டு உசுரு ஊசலாடிட்டு இருக்கு... "

"அது இங்க வந்ததுல இருந்து ஊசலாடிட்டுத்தான் இருக்கு... என்னமோ புதுசா சொல்றிங்க?"
(This dialogue credit goes to Vaijayanthi Rangaraj sis 💖)

அதற்குள் வினோதனை நோக்கி ஒரு பெரும் கல் வர அவன் அலறும்முன் அவனைப்பிடித்திழுத்த மனோரதன் அவனோடு தரையோடு தரையாகப் படுத்தான். அவன் தனது அறிவை எண்ணிப் பெருமிதம் கொண்ட அடுத்த நொடி, மேலிருந்து ஒரு கற்சங்கிலி பெருங்கல் ஒன்றோடு தரையை நோக்கி, அதாவது இவர்களை நோக்கி ஊசலாடியபடி வந்தது.

இருவரும் அலறுவதற்குக் கூடப் பயந்து கண்ணை மூடிய நொடி கால் இழுபடுவதை உணர்ந்தவர்களாய்க் கண்ணைத் திறந்தனர். மனோரதனை அமிழ்தாவும் வினோதனை அருளாளனும் பிடித்து இழுத்திருந்தனர். அவர்கள் கண்ணைத் திறந்து பார்க்கும்போது அமிழ்தாவும் அருளாளனும் கண்ணை மூட, அவர்கள் பழைய இடத்தில் இருந்தனர். வினோதனது காலை அருள் மெதுவாக இறக்கி, அவனைப் பத்திரமாக எழுப்பி உட்கார வைத்தான்.

அமிழ்தா, அந்த இடத்தைச் சுற்றும்முற்றும் பார்த்தபடி “இது நாம வீடியோ எடுத்துட்டு இருந்த இடம்தானே” என்று கேட்ட மனோரதனது காலை கடுப்புடன் வேகமாக விட்டாள்.

“அம்மா...” அவன் கத்தியபடி காலைப்பிடித்துக்கொண்டு எழுந்து அமர, “டேய்... என்னடா இப்படி நடிக்கிற?” அமிழ்தா அதிர்ச்சியாகக் கேட்டாள்.

“ஐயோ... பேயே... காலை தரைல அடிச்சதுமில்லாம நடிக்கிறன்னு வேற சொல்றியே... ஆ.. அம்மா.. வலிக்குதே...”

“நான் தரைல அடிச்சனா? மெதுவா விடலதான்.. அதுக்காக அடிபடுற மாதிரியும் விடலயே...”

விழி தாண்டும் வழிகள்(Completed)Where stories live. Discover now