“என்னக்கா எழுதிருக்கு?” வினோதன் ஓலையையே பார்த்துக்கொண்டிருந்த அமிழ்தாவைக் கேட்டான்.
“ஒரு ஓலைக்கு ஒரு எழுத்துதான் இருக்கு அமி?” அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த அருளாளனும் யோசனையாகக் கேட்டான்.
“இது எழுத்து இல்ல அருள்...”
“அப்பறம்?”
“நம்பர்.. கிரந்தத்துல எழுதிருக்காங்க...”
“நம்பரா? அதை வச்சு என்ன போனா பண்ணமுடியும்? ஏதாவது வெளில போக பாஸ்வேர்ட் மாதிரி கோட்வேர்ட் கிடைக்கும்ன்னு பார்த்தா கோடுகோடா ஏதோ கிடைச்சுருக்கு...” மனோரதன் புலம்ப ஆரம்பித்தான்.
“கோட்வேர்ட் வேணுமா? வேணும்ன்னா அண்டக்காகஸம் அபுக்காகஸம் திறந்திடு சீஸேன்னு சொல்லிப்பார்க்கிறியா மனோ?” அமிழ்தா கேட்டாள்.
அவளது முகமோ குரலோ அவள் நக்கல் செய்வது போன்ற பாவனையைக் காட்டவில்லையென்றாலும் அவள் நக்கல்தான் செய்கிறாள் என்பது தெரியாத அளவு உள்ளே இருப்பவர்கள் சிறுபிள்ளைகள் இல்லையே. மனோரதன் கடுப்பானான்.
“சொல்லுவக்கா.. சொல்லுவ... ஏன் சொல்ல மாட்ட? செத்துட்டோம்ங்கற எகத்தாளம் உனக்கு...”
“அவ்ளோ பொறாமையா இருந்தா நீயும் வேணா செத்துரு... சீனியர் உனக்காக ரொம்ப வருசமா வெயிட்டிங்க்ன்னு நினைக்கிறேன்... எனக்கும் இந்தக் குகைக்குள்ள உங்களோட மாட்டி ரொம்ப போரடிக்குது.. வெளிய போனா நானும் அருளும் சுடுகாடு,இடுகாடுன்னு சுத்திக்கிட்டாவது இருப்போம்...”
“அந்தப் பேயை வேற ஏன்க்கா ஞாபகப்படுத்துற? ஆமா.. அது நம்ம பக்கத்துல இருக்கா என்ன?” பயந்தபடியே கேட்டான் மனோரதன்.
“தெரியல மனோ.. இருக்கலாம்.. இல்லாமலும் இருக்கலாம்.”
“சும்மா அவனை பயமுறுத்தாத அமி. அதெல்லாம் யாரும் இல்ல மனோ... நீ பயப்படாத...”
“ப்ச்... அப்பறம் நமக்கு ஒரு என்டர்ன்மெயின்ட் வேணாமா மிஸ்டர் கோஸ்ட்? பக்கத்தில இருக்கவன் பயந்தாதான நல்ல எபெக்ட் இருக்கும்...”
அமிழ்தா சொல்ல அருளாளன் யோசனையாய் மனோரதன் முகத்தைப் பார்த்துவிட்டு வந்த சிரிப்பை அடக்கினான்.
VOUS LISEZ
விழி தாண்டும் வழிகள்(Completed)
Mystère / Thrillerதேடும் விழிகளைத் தாண்டி வழிகள் நீண்டால்? அருள்🖤அமி (சுடுகாட்டில் தென்றல் வீசினால் பார்ட் -2)