“நான்...நான்.. தேவிதான்...”
என்றவள், மனோரதனின் புறம் திரும்பினாள்.
அவள் அவன் முகத்தெதிரே நீட்டியதைப் பார்த்த மனோரதன் அதிர்ந்தான்.“எ...எ...என்...என்...என்ன...திது?”
“இதைக் கேட்க ஏன் வார்த்தையை இத்தனை தடவை கொப்பளிக்கிறீங்க? பார்த்தா தெரியலயா.. அத்..தான்.. தாலி...” என்றாள்.
“அது தெரியுது.. அதை ஏன்ம்மா என் முன்னாடி நீட்டுற?”
“உங்க முன்னாடி நீட்டாம வேற யார் முன்னாடி அத்தான் நீட்டுறது?”
“ஆங்? என்னை விட்டுரும்மா.. உனக்குப் புண்ணியமா போகும்...”
“என்னோட புண்ணியத்தோட பலனே நீங்கதானே அத்தான்...”
“ஆத்தி..” அலறியடித்த மனோரதன் அருளாளன் பின்னால் வந்தான்.
“ஓ.. அண்ணன் கையால நமக்குத் தாலி எடுத்துக் கொடுக்கணுமா?” என்ற தேவி, தாலியை அருளாளனின் கையில் திணித்தாள்.
“அண்ணா.. நீங்களே அவரைக் கட்டச் சொல்லுங்கண்ணா...”
“ண்ணா...ண்ணா...” மனோரதன் அருளாளனின் பின்னாலிருந்து சுரண்டினான்.
“என்னடா?”
“எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுண்ணா...”
“என்ன பண்ணனும்? தாலியைக் கையில கொடுக்கணுமா?”
“யோவ்.. நீயே என்னை அந்தப் பேயோட கோர்த்துவிட்டுக் குடித்தனம் வச்சுருவ போல.. அந்தத் தாலியை வாங்கி பேசாம உன் ஆள் கழுத்தில கட்டிருண்ணா...ப்ளீச்...”
“என்னது?”
“ஆமாண்ணா.. பேசாம அக்கா கழுத்துல கட்டிருண்ணா...”
அருளாளன் அமிழ்தா முகத்தைப் பார்க்க, அவள் வேகமாக மறுப்பாகத் தலையசைத்ததோடு, அவனிடம் மனதிற்குள் “அப்படி ஏதாவது பண்ணன்னா உன்னைக் கொன்னுருவேன்டா...” என்றும் சொல்லவும்தான் அவனுக்கு நிம்மதியே பிறந்தது.மூச்சில்லாமல் பெருமூச்சு விட்டவன், அமிழ்தாவின் அருகில் தாலியோடு வந்தான். அவளைச் சீண்டிப் பார்க்க எண்ணியவனாக, அதை அவளது கழுத்தருகில் கொண்டுவர வேகமாகப்பின்னால் நகர்ந்தாள்.
YOU ARE READING
விழி தாண்டும் வழிகள்(Completed)
Mystery / Thrillerதேடும் விழிகளைத் தாண்டி வழிகள் நீண்டால்? அருள்🖤அமி (சுடுகாட்டில் தென்றல் வீசினால் பார்ட் -2)