நால்வரும் அந்த குகைக்குள்ளேயே கசிந்து ஓடிக்கொண்டிருந்த நீரோடையின் கரையில் அமர்ந்திருந்தார்கள். வெளிச்சத்திற்காக அங்கே எரிந்து கொண்டிருந்த தீப்பந்தங்களையே குறுக்காக அடுக்கிவைக்க அது வெளிச்சத்தோடு வெப்பத்தையும் தந்தது.
மனோரதனும் வினோதனும் ஓரமாக அமர்ந்து இருந்த கொஞ்சம் பிஸ்கட்டுகளை உண்டு கொண்டிருக்க, சற்றுத்தள்ளி அமிழ்தா அருளாளனின் தோளில் சாய்ந்து அமர்ந்திருந்தாள்.
அவனது கையை இறுகப்பற்றி, விரலோடு விரல் பிணைத்திருந்தவள், அவனிடம் மனதோடு பேசிக் கொண்டிருந்தாள்.
‘அருள்...’
அவளது அழைப்பில் தொனித்த லேசான கவலையின் சாயலையும் கையின் இறுக்கத்தில் தெரிந்த லேசான அச்சத்தின் பிரதிபலிப்பையும் உணர்ந்த அருள் மென்மையாகக் கேட்டான்.
‘என்னடா?’
‘ஒருமாதிரி இருக்கு...’
அமிழ்தா சொல்ல அருளாளன் அவள் பிணைத்திருந்த விரல்களை மெல்ல விடுவித்தான். அதை உணர்ந்த அமிழ்தா அவனது தோளிலிருந்து எழாமலேயே அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவளது விழிகளில் நடமாடிய உணர்ச்சிக்கலவையைப் பார்த்துப் புன்னகைத்தவன், விடுவித்த கையைச் சுற்றி அவளது தோளில் போட்டு நெஞ்சோடு அணைத்து மெல்ல அவளது தோளில் தட்டிக்கொடுத்தான்.
அமிழ்தா அவனில் முகம் புதைக்க, சிலநிமிடங்களை மௌனதிற்குக் கொடுத்த அருளாளன் அவளை மெதுவாக அழைத்தான்.‘அமி...’
‘ம்ம்...’
‘நீ... வேணா... வெளில போய் மாமா பக்கத்தில இருக்கியா அமி?’
அவன் கேட்கவும் சில நொடி அமைதி காத்த அமிழ்தா இருந்த நிலையிலிருந்து எழாமலே மறுப்பாகத் தலையசைத்தாள்.
'என்னால இங்க தனியா கூட சமாளிக்க முடியும் அமி.. நீ போயிட்டு வா...'
அருளாளன் சொல்ல மீண்டும் அவனை நிமிர்ந்து பார்த்தாள் அமிழ்தா.
'நிஜமாதான்.. போயிட்டு வா.. எங்களைப் பத்தி கவலைப்படாத...'
'மிஸ்டர் கோஸ்ட்...'
YOU ARE READING
விழி தாண்டும் வழிகள்(Completed)
Mystery / Thrillerதேடும் விழிகளைத் தாண்டி வழிகள் நீண்டால்? அருள்🖤அமி (சுடுகாட்டில் தென்றல் வீசினால் பார்ட் -2)