“அடச்சை.. வெளியே போனா என்ன ஆகும்ன்னு உடனே சொல்லித்தொலைய வேண்டியதுதான? அதுக்கு எதுக்கு இந்த வெட்டி பில்டப்பு.. மண்ணாங்கட்டி...”
“நான் பேய்தான் ஞாபகம் இருக்கட்டும் அத்...தான்...” என்றாள் தேவி கிண்டலாக.
“அத்தான் கித்தான்னன்னா மண்டையைப் பொளந்துருவேன்.. என்னை விட 24 வயசு கூடுதலா இருக்க கிழவி நீ? ஒரு குழந்தையைப் பார்த்து அத்தான்னு சொல்லிட்டு இருக்க?”
“ஹலோ? நான் செத்து 24 நாலு வருசம் ஆகிருக்கலாம். ஆனா நான் செத்தப்ப எனக்கு இருந்த 22 வயசுலதான் நான் இப்பவும் இருக்கேன்... அதனால உன்னை விடச் சின்னப்பொண்ணுதான். கிழவி கொழவின்னு சொன்னன்னா உன் ரத்தத்தைக் குடிச்சுருவேன்...” தேவி அவனது கழுத்தை நெறிப்பது போல கையைக் கொண்டுவர,
“கொஞ்சம் நிறுத்திறீங்களா ரெண்டுபேரும்?” அமிழ்தா காதில் கைவைத்தபடி கத்தினாள்.
“போனா என்ன ஆகும்?” வினோதன் கேட்டான்.
“திரும்ப உள்ள வந்து வெளில வரவே முடியாதமாதிரி ஆகும்...”
“புரியல..”
“நான் ஒரு ஆர்க்கியாலஜி ஸ்டுடன்ட்... பைனல் இயர் ப்ராஜெக்ட்க்காக ஒரு இடம் தேடிட்டு இருந்தேன்.. எதேச்சையா நான் மலைல ஏதாவது சமணப்படுகைகள் இல்ல கல்வெட்டுக்கள் இருக்கான்னு பார்க்க வந்தப்போ தெரியாம ஒரு கல்லில் இடிச்சேன்.. உள்ளப்பார்க்கும்போது குகை மாதிரி இருந்தது. சரி போய்ப் பார்க்கலாமேன்னு உள்ள வந்தேன்... உள்ள வந்து பார்க்கும்போது நான் ஆசைப்பட்ட மாதிரியே இங்க ஒரு கல்வெட்டு கிடைச்சது. இந்தச் சிறைச்சாலை ஆபத்தானதுன்னும் ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு கல்தச்சர் வைச்சு கட்டுனதுனால கட்டுனவங்களே நினைச்சாலும் வெளியே போக முடியாதுன்னும் இருந்தது. தலைமை வடிவமைப்பாளரா இருந்தவருடைய மகனோட இறப்புக்குக் கூடப் போகாம உள்ள இருந்த இவரோட உறுதியைப் பாராட்டி வைக்கப்பட்ட கல்வெட்டுத்தான் அது. அதை வச்சுதான் இப்ப அந்தக் கதையை எழுதுனேன்.”
YOU ARE READING
விழி தாண்டும் வழிகள்(Completed)
Mystery / Thrillerதேடும் விழிகளைத் தாண்டி வழிகள் நீண்டால்? அருள்🖤அமி (சுடுகாட்டில் தென்றல் வீசினால் பார்ட் -2)