அருளாளன் கேட்க, மனோரதன் வினோதனின் விழிகள் விழுந்துவிடலாமா என எட்டிப்பார்த்தன. தேவி மட்டும் எதிர்ப்பார்த்ததுதானே என்பதைப் போல ஆனால் சற்றுக் கவலையுடன் நின்றாள்.
அவர்கள் மூவரையும் பார்த்தவன், மீண்டும் “எக்ஸ்க்யூஸ்மீ?” என்றான்.
மனோரதன்தான் முதலில் மீண்டுவந்து “யோவ் அண்ணா.. என்னய்யா கேட்குற?” என்றான்.“யோவா? மிஸ்டர் மைன்ட் யுவர் லாங்க்வேஜ்...” அருளாளன் சீற ஏதோ வித்தியாசத்தை உணர்ந்த வினோதன் மனோரதனின் கையைப் பற்றினான். ஆனால் மனோரதன் அதைக் கவனிக்காமல் அருளாளனிடம் தொடர்ந்தான்.
“ மைன்ட் யுவர் லாங்குவேஜா? யோவ் அண்ணா இப்படிதான இவ்ளோ நேரம் கூப்பிட்டு இருந்தேன்... நான் இங்க தான் இருப்பேன் பயப்படாதீங்கன்னு அந்தக்காவை ஏதோ வெற்றித்திலகம் இட்டு வெளில அனுப்பிவிட்டுட்டு எங்ககிட்டயே வழி கேட்டதுமில்லாம இப்ப மைன்ட் யுவர் லாங்குவேஜ் மண்ணாங்கட்டி யுவர் லாங்குவேஜ்ங்கற? விளையாடதண்ணா...”
“என்னது? விளையாடுறனா? என்னைப் பார்த்தா உங்களுக்கு விளையாடுற மனநிலைல இருக்கவன் மாதிரி இருக்கா? அதோட நான் எந்தக்காவை எங்க அனுப்பினேன்? என்ன உளர்றீங்க?”
இன்னும் ஏதோ பேசப்போன மனோரதனை தேவி கையைப்பிடித்து இழுத்துத் தடுத்தாள்.
“ஷ்ஷ்... அவருக்கு எதுவும் ஞாபகம் இல்ல.. குழப்பத்துல இருக்காங்க.. இறந்துபோனது மட்டும்தான் ஞாபகம் இருக்கும்.. கொலைங்கறதால அதோட தாக்கமா கோபம் இருக்கும்... நீ உன் வாயை வச்சுட்டு சும்மா இருக்காம எதையாவது சீண்டிவிட்டன்னா அப்பறம் உன்னை யாராலயும் காப்பாத்த முடியாது. அமைதியா இரு கொஞ்சம்...”
அவள் சொல்லவும் அவன் பயத்தில் வாயை இழுத்து மூடிவிட, அந்த இடம் நிசப்தத்தைத் தத்தெடுத்தது.
அருளாளன் அந்த இடத்தையே அண்ணாந்தும் சுற்றியும் பார்த்துக்கொண்டிருந்தான்.
“இந்த இடம் என்ன வித்தியாசமா இருக்கு? இங்க இருந்து எப்படி வெளில போறது? வழி சொல்லுங்க...”
YOU ARE READING
விழி தாண்டும் வழிகள்(Completed)
Mystery / Thrillerதேடும் விழிகளைத் தாண்டி வழிகள் நீண்டால்? அருள்🖤அமி (சுடுகாட்டில் தென்றல் வீசினால் பார்ட் -2)