11

265 17 23
                                    

“என்னது? நான் எப்ப செத்தனா? யக்கா என்னக்கா கேட்குற?”
அவன் அதிர்ந்து போய்க் கேட்க, அருளும் அமிழ்தாவும் அவனை வருத்தத்துடன் பார்த்தனர்.

“விளையாடாதீங்கண்ணா.. ப்ளீஸ்.. எனக்குப் பயமா இருக்கு...”

அவன் பயந்துபோய் சொல்லவும் அருளாளன்மீண்டும் அவனது கையைப் பற்றிப் பார்த்தான். ம்ஹீம்...நிஜமாகவே உயிரில்லை. சாரி.. உடலில்லை.

ஒரு கணம் யோசித்துவிட்டு அங்கு எதுவும் புரியாமல் நின்றிருந்த மனோரதனின் கையைப் பற்றிப் பார்த்தான். நல்லவேளையாக அவன் உயிரோடுதான் இருந்தான். இவனுக்கு என்ன ஆனது? கண்ணை மூடிப்பார்த்தவனுக்கு இருளில் ஏதோ ஆழமான நீரில் மிதந்து கொண்டிருந்த வினோதனின் உடல் தெரிந்தது.

“நல்லா யோசிச்சுப் பாரு வினோ... என்ன ஆச்சு...” அமிழ்தா வினோதனிடம் கேட்டுக்கொண்டிருந்தாள்.

“இல்லக்கா.. எல்லாரும் கையைப்பிடிச்சோமா? கண்ணை முழிச்சுப் பார்க்கும்போது நான்மட்டும் தனியா இருந்தேன்... உங்க எல்லாரையும் தேடிட்டே வந்துட்டு இருந்தேன்.. மனோவைப் பார்க்கணும்ன்னு நினைச்சுட்டே வந்துட்டு இருந்தேன்.. மனோ இருந்த இடத்துக்கே அப்படியே நடந்து வந்துட்டேன்.. அதுக்கப்பறம் மனோக்கு என்னமோ ஆச்சு... அப்பறம் அண்ணா வந்தாங்க.. அப்பறம் நீங்க வந்தீங்க.. மனோவைக் காப்பாத்துனீங்க.. வழி இருக்குன்னு சொல்லி வெளில கூட்டிட்டு வந்தீங்க.. இது மட்டும்தான் எனக்கு ஞாபகம் இருக்கு...”

அவன் சொன்னதைக் கேட்ட அமிழ்தாவும் அருளாளனும் தீவிரமாக யோசித்தனர். அவர்கள் அருகில் இருக்கும்போது இவன் உயிரிழந்திருக்க வாய்ப்பே இல்லை. அப்பறம் எப்படி?

“அண்ணா.. அப்பறம் இன்னொன்னு.. மனோவைத் தேடி வந்தேன்னு சொன்னேன்ல.. .அப்ப ஒரு இடத்துல ரொம்ப தண்ணியா இருந்தது... அதுக்குள்ள தெரியாம விழுந்துட்டேன்.. ஆனா அது என்னை ஒண்ணும் பண்ணல.. நானாவே எழுந்திருச்சு வந்துட்டேன்...”

அவன் சொல்ல அருளாளன் ஷ்ஷ்.. என்றான்.

“என்ன அருள்?”

விழி தாண்டும் வழிகள்(Completed)Where stories live. Discover now