19

248 19 3
                                    

அருவமாக இருந்தது ஒரு பெண் உருவமாக மாறி, “அத்தான்..” என்றழைத்தபடி அருளாளனை நோக்கி வர, அமிழ்தாவின் முகத்தில் இருந்த சிரிப்பு செத்தது.

“நீங்க என்கிட்ட பேசமாட்டீங்களா அத்தான்?” என்றபடி அந்த உருவம் அவ்வளவு நேரம் அமைதியாக அருளாளனின் அருகில் வர, சட்டென எழுந்த அமிழ்தா, அருளைத் தன் பக்கம் பிடித்து இழுத்தாள்.

“யக்கா.. அண்ணனை மட்டும் உன் பக்கம் இழுத்தா பத்தாது.. இங்க ரெண்டு பச்சை மண்ணுங்க இருக்கோம்..” என்ற வினோதனும் அவர்கள் பக்கம் வந்துவிட, அவர்கள் மூவரையும் கண்டுகொள்ளாமல் வினோதனைப் பின்தொடர முயன்ற மனோரதனின் கையை அந்த உருவம் பிடித்தது. அவள் அத்தான் என மனோரதனை அழைக்க, அமிழ்தாவின் முகத்தில் பரவிய நிம்மதியைக் கண்ட அருளாளனின் முகத்தில் குறும்பு படர்ந்தது.

“அமி.. இப்ப இங்க யாரோ ஒரு குழந்தை ஒரு நிமிஷம் பயந்த மாதிரி இருந்துச்சு.. பார்த்தியா என்ன?”
கேட்டவனை நறுக்கென்று கிள்ளிவைத்த அமிழ்தா அவனைப் பார்த்து முறைத்தாள்.

“ஷ்... ஆ.. ஏன்டி...”

“அப்பறம் என்ன? அந்தப் பொண்ணு அத்தான்னு கூப்பிட்டுப் பக்கத்தில வருது.. நீ பாட்டுக்கு அங்க நிக்குற? எழுந்துருச்சு என் பக்கம் வந்துருக்கணுமா இல்லையா?”

“அடிப்பாவி.. நம்மளை நம்பி 2 பச்சைமண்ணுங்க இருக்குங்க.. அது என்ன பேய்ன்னே தெரியல.. துணைக்கு நின்னது ஒரு குத்தமா? ஆனா அந்தப் பொண்ணு அத்தான்னு கூப்பிட்ட நேரம் நல்லா இருந்துச்சு...”

“என்னது? டேய்.. உன்னைக் கொன்னுருவேன்...”

“நான்தான் ஏற்கனவே செத்துட்டனே...” அவளைப் பார்த்துக் கண்ணடித்துச் சிரித்தவனைக் கொலைவெறியுடன் முறைத்தாள்.

“உனக்கு வேணும்ன்னா நானும் உன்னை அத்தான் பொத்தான்னு கூப்பிட்டுத் தொலையுறேன்... இப்படிலாம் சொல்லாதடா...” கலவரமாகச் சொன்னவளது தலையில் செல்லமாகத் தட்டினான்.

“ஏய்.. லூசு.. நான் என்ன அந்தப் பொண்ணு கூப்பிட்டது நல்லா இருந்துச்சுன்னா சொன்னேன்? அந்த நேரம் நல்லா இருந்துச்சுன்னு சொன்னேன்...”

விழி தாண்டும் வழிகள்(Completed)Where stories live. Discover now