“ம்க்கும்... அடப்போண்ணே.. நீ வேற... வெளில போலாம்ன்னு வழியைத் தேடுனாலே முழி பிதுங்குது... இதுல இந்த இடத்தைப் பத்தி எங்கிட்டுத் தேடுறது?” என்ற வினோதன் கன்னத்தில் கையை வைத்து அங்கிருந்த கூழாங்கற்களை எடுத்துத் தூரத்தில் வீசத் தொடங்கினான்.அதில் ஒரு கல் சுழன்றோடி தரையிலிருந்த சிறுதுளை ஒன்றில் விழ, இவர்களுக்குப் பின்னால் ஏதோ சத்தம் கேட்டது. நால்வரும் திரும்பிப்பார்த்தார்கள்.. பின்னாலிருந்த சுவர் நகர்ந்திருந்தது. ஒரு வழி தெரிந்தது.
திடீரென கேட்ட சத்ததில் பயந்துபோன வினோதன் அருளாளனின் கையை இறுகப் பற்றியபடி மெல்ல எட்டிப்பார்த்தான். பின்னாலிருந்த சுவர் லேசாக நகர்ந்திருப்பதைப் பார்த்த அமிழ்தா ஓர் ஆச்சரியத்துடன் அதே முகபாவனையுடன் இருந்த அருளாளனைப் பார்த்துவிட்டு எழுந்து அந்த சுவர் அருகில் சென்றாள். தனியாக அமர்ந்திருக்கிறோம் என்பதை உணர்ந்த மனோரதன் மெல்ல நகர்ந்து அருளாளனின் அருகில் வந்தான்.
ஒரு கை மட்டுமே நுழையக்கூடிய அளவில் நகர்ந்திருந்த அந்தச் சுவரைப்பார்த்தவள், “என்னடா பண்ண?” என்று வினோதனை நோக்கிக் கேட்டாள்.
“நான் ஒண்ணும் பண்ணலக்கா.. சும்மா கல்லைத்தான் தூக்கிப்போட்டுட்டு இருந்தேன்.. நான் எதுவும் பண்ணி அது நகரலக்கா...”
“ம்ம்...” யோசித்தபடி அவன் தூக்கிப்போட்ட கற்கள் இருந்த இடத்திற்குச் சென்றாள் அவள். சிதறிக்கிடந்த கற்களைக் கையில் எடுத்தவள் யோசனையாக கீழே பார்க்க, அங்கே தரையில் இருந்த துளை தெரிந்தது.
“அருள்.. இங்க வாங்க...”
அவள் அழைக்க, அருளாளன் எழுந்து வந்தான். வினோதனும் மனோரதனும்தான்.“இவன் போட்ட கல் இந்தத் துளைக்குள்ள விழுந்துதான் அந்த சுவர் நகர்ந்திருக்கும்ன்னு எனக்குத் தோணுது அருள்... இருக்குமா?”
“ இன்னொரு கல்லை உள்ள போட்டுப்பார்த்தா தெரிஞ்சுரப்போது..” என்றபடி அமிழ்தாவின் கையில் இருந்த கற்களில் ஒன்றை எடுத்தவன் அந்தத் துளைக்குள் போடப்போனான்.
KAMU SEDANG MEMBACA
விழி தாண்டும் வழிகள்(Completed)
Misteri / Thrillerதேடும் விழிகளைத் தாண்டி வழிகள் நீண்டால்? அருள்🖤அமி (சுடுகாட்டில் தென்றல் வீசினால் பார்ட் -2)