இராவணனின் சீதை 1 💖

4.1K 32 3
                                    

அந்த அக்ரஹாரத்தின் நடுவில் இருந்த வீட்டின் முழுக்க உறவினர்கள் கூட்டமாக நிறைந்து இருந்தது... வீட்டின் நடுவில் ஒரு பெண் சடலத்தை வைத்து புதிதாக வாங்கிய சேலையை போற்றி தலையின் மேல் விளக்கேற்றி வைத்து சுற்றி பெண்கள் கூட்டம் அழுது கொண்டு இருந்தார்கள்....

அவள் கணவன் கண்ணீர் வற்றி கை குழந்தையுடன் அவளை பார்த்தவாறு அமர்ந்து இருந்தான்... இறுதி சடங்குகளை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவரை குழந்தையின் அழு குரல் வரவேற்றது...

அவரது அன்னையிடம் என்ன ஆச்சு அம்மா பாப்பா என் அழுகுறா என்று கேட்க பிஞ்சு குழந்தை எதுக்கு டா அழுகும் ... தாய் பாலுக்கு ஏங்கி அழுது என்ன செய்ய வேந்தா என்று பர்வதம் சேலை தலைப்பால் கண்களை துடைத்துக் கொண்டு கேட்டார்....

வைதேகி இறப்பு இருவரையும் பெரிதும் வாட்டியது... மருமகள் என்ன சொன்னாலும் முகம் சுளிக்காமல் பொறுமையாக செய்து மகள் இல்லாத குறையை அல்லவா ஈடு செய்தால்...

குழந்தையை நன்றாக தான் இருவரும் வளர்த்தனர்... வேந்தன் ஒரு அரசு பணியில் உதவி ஆய்வாளராக உள்ளார்... மகளுக்கு யுகமதி என்று பெயர்‌ வைத்து அன்புடன் வளர்த்தார்.. ஆனால் அவளை வேந்தன் மனைவி விருப்ப பட்ட பெயரான ஜானகி அல்லது ஜானு என்று தான் அழைப்பார்... அவளுக்கு இரண்டு வயதில் பர்வதம் உடல் நிலை சரியில்லாமல் படுத்த படுக்கை ஆனார்...

உறவினர்கள் அனைவரும் வேந்தனுக்கு இரண்டாம் திருமணம் செய்து கொள்ள சொல்ல முதலில் மறுத்தவர் அவர் தாயின் உடல் நிலையை கவனிக்கவும் யுகமதியை பார்த்து கொள்ள அவருக்கு ஒரு ஆள் தேவை பட்டது ... அதனால் அவர் சரி என்று சொல்லி விட அடுத்த மாதத்திலே சாவித்திரி என்ற உறவு பெண் ஒருவளை மணமுடித்து வைத்தார்கள்...

முதலில் பாசமாக இருப்பது போல இருந்தவள் நாளுக்கு நாள் சிடு சிடு என்று விழுந்தார்... அவளுக்கு யுகமதியை சற்றும் பிடிக்க வில்லை ... கணவரிடம் பேச சென்றாள் அங்கு பசை போல அவரிடம் ஓட்டி கொண்டு இருக்கும் மதியை பார்க்க கோபமாக வரும் அவளுக்கு...

இராவணனின் சீதை 💖Waar verhalen tot leven komen. Ontdek het nu