வீட்டுல இருந்து தப்பிச்சாச்சு!

11 3 0
                                    

"பாட்டி! ஒரு பத்து நாள் தான். சேட்ட பண்ணாம ஒழுங்கா சமத்தா இருக்கணும், சரியா? ஐயா வீட்டுல இல்லன்னு அழுமூஞ்சியா இருக்கக் கூடாது" 

"அடி! கழுத, நீ இல்லாம வீடு நிம்மதியா இருக்கும் போ டா"

"சும்மா சமாளிக்காதீங்க பாட்டி, நான் இல்லன்னு ரொம்பலாம் ஃபீல்  பண்ணாதீங்க. உங்கள நல்லா கவனிக்க ஆளு வச்சுட்டு தான் போறேன். புரியுதா? நான் இல்லாத நேரத்துல நீங்களும் வீட்ட பத்ரமா பாத்துக்கோங்க. நான் இல்லாம அது கொஞ்சம் கஷ்டம் தான், இருந்தாலும் என்ன பண்ணுறது! ஒரு வி.ஐ.பி ஆகிட்டா ஆயிரம் கல்யாணம் ஆயிரம் காதுகுத்துன்னு கூப்புடுறாங்களே! முடியாதுன்னும் சொல்ல முடியல,"

"உன் அண்ணன் கூட ஓசில போறதுக்கே இந்த ஆட்டம் ஆடுறியே! உன் கூட படிக்கிற புள்ளைங்களுக்குலாம் கல்யாணம்னா அவங்க வீட்டுக்கு தத்து புள்ளையா கூட போய்ருவ போலவே!"

"ஒஹ்! டெஃபனட்லி, டெஃபனட்லி!" 

"அஜ்ஜு, ரெடியா டா?" ஆளுக்கு முத்தி கிளம்பிவிட்டு, நடுகூடத்தில் அமர்ந்து தன் பாட்டியை வம்பிழுத்துக் கொண்டிருந்த தம்பியை நோக்கி கத்தியபடியே ஹர்ஷன் கிளம்பி வர, "ஐயா ஆல் செட்." பாட்டியிடமிருந்து எழுந்த அர்ஜுன், "ஓகே! பேமிலி மெம்பர்ஸ்... எல்லாரும் வாங்க, வாங்க. வந்து, ஐயாவ வாழ்த்தி வழியனுப்பி வைங்க" வீட்டில் உள்ளவர்களை ஏலமிடத் தொடங்கினான்.  நடுவீட்டில் நின்றுக்கொண்டு கூப்பாடு போடும் தம்பியை தலையில் தட்டிய ஹர்ஷன், "பாட்டி, கவல படாதீங்க. உங்க குட்டி கழுதைய பத்ரமா கூட்டிட்டு போய்ட்டு கூட்டிட்டு வந்துறேன்." தன் பங்கிற்கு பாட்டியிடம் சொல்லியவன், அர்ஜுனின் கூச்சலால் கூடத்திற்கு வந்துவிட்ட அனைவரிடமும் விடை பெற்றுக்கொண்டு, தம்பியை இழுத்துக்கொண்டு வாயிலுக்கு வந்தான்.

நேற்றைய இரவு பொழுதில் தாத்தா பாட்டியை எப்படியோ கெஞ்சி கொஞ்சி சமாதானம் செய்து முடித்த அர்ஜுனும் ஹர்ஷனும், அவனின் கல்லூரி தோழிக்கு திருமணம் என சொல்லிவிட்டு அதை சாக்காக வைத்து பத்து நாள் விடுமுறையை கழிக்க பக்காவாக ஒரு திட்டம் தீட்டி அவர்களின் கையில் கொடுத்துவிட்டு இப்போது, தேனியில் உள்ள தன் அத்தையை காண புறபட்டு விட்டார்கள் சகோதரன்கள் இருவரும். மனதில் உள்ள பாரத்தை மறைத்து, அவர்களை வழியனுப்பி வைத்தார்கள், சங்கரி மற்றும் செல்வகுமார்.

காவல் வீரா - 2 (ரக்ஷவனின் சாகச பயணம்)Tahanan ng mga kuwento. Tumuklas ngayon